பக்கம் எண் :

118தமிழ் இந்தியா

திரிதிரயதா என்னும் பிராமணன் கம்போதியாவினின்றும் எண்ணூறு கிளிங்குக் (Kling) குடும்பங்களோடு சென்று பிரமாரி காளி என்னும் யாவக மாதை மணந்து அந்நாட்டுக்கு அரசனானான் என அந்நாட்டுப் பழங்கதைகள் கூறுகின்றன. யாவகத்தின் முதல் அரசனுக்கு ஸ்ரீமாறன் என்று பெயர். இப்பெயர் சாவக நாட்டின் அரச பரம்பரை தமிழ் உற்பத்தியுடையதென்பதை நன்கு விளக்கும். யாவாவிலுள்ள பெரொக் என்னும் மக்களிடையே இன்றும் திராவிடக் குடும்பப் பெயர்கள் வழங்குகின்றன.1 யாவாவிலே மிகப் பெரிய சில ஆலயங்களின் அழிபாடுகள் காணப்படுகின்றன. பழைய புராணங்களில் யாவகத்தீவு, சுவர்ணபூமி எனக் கூறப்பட்டுள்ளது. யாவகத் தீவிலும் அதனை அடுத்துள்ள தீவுகளிலும் காணப்படும் அழிபாடுகளாலும், கிடைத்துள்ள பழம்பொருள்களாலும் பிறவற்றாலும் அறியக்கிடப்பன பின்வருமாறு: 2 யாவாத் தீவிற் காணப்படும் திருக்கோயில்களுட் பல சிவனுக்கு உரியன. யாவக மக்களின் அமரமாலை என்னும் நூல் பழமையுடையது. அஃது அம் மக்கள் வழிபட்ட தெய்வங்களைப்பற்றிக் கூறுகின்றது. அந்நூலினால் அந்நாட்டினர் சிவனையே தலைமையாகக்கொண்டு வழிபட்டார்களெனத் தெரிகின்றது. சிவன், குரு, ஈஸ்வரன் என்னும் பெயர்களால் வழிபடப்பட்டார். சுமத்தியாவிலே லாரா யொங்றாங் (Lara Yongrang) என்னுமிடத்தில்


  1. Dravidian tribal names are still to be found among the Bataks - India and the Pacific world; Kern recogaised long age that the earliest Indian colonists of Sumatra were of Dravidan origin. Before the spread of Malays in different parts of the archopaelago, the Dravidian element was supreme. The Austric people of Cambodia mixed with the Dravidians and founded a powerful kingdom long ago - Prebistoric Ancient and Hindu India. P 30 R. D. Banerji.

  2. Ancient Indian Colonies in the Far East - Dr. R. C. Mazumdar.