ஆலயக் கூட்டங்களின் பெரிய அழிபாடு உள்ளது. இதன் நடுவில் பெரிய சிவன் கோயிலும், இருமருங்கிலும் பிரமன், திருமால் ஆலயங்களும் எதிரே நந்தியின் ஆலயமும் உள்ளன. வலப்பாதி சிவனும் இடப்பாதி உமையுமாகவுள்ள அர்த்த நாரீசுவரத் திருவடிவமும் அங்குக் காணப்படுகின்றது. விநாயக விக்கிரகங்கள் மிகப் பல இங்குள்ளன. இவை இந்திய ஆலயங்களிற் காணப்படும் திருவுருவங்களைச் சாலவும் ஒத்தன. போர்க் கடவுளாகிய கார்த்திகேயக் கடவுளின் திருவுருவங்களும் யாவாவிற் காணப்படுகின்றன. மனித வடிவம் மயில்மீது ஏறிச்செல்வது போன்ற உருவங்களே பெரும்பாலும் உள்ளன. ஆறு தலையும் பன்னிரண்டு கையுமுள்ள திருவுருவங்கள் சிலவும் காணப்படுகின்றன. சிவன் இலிங்க வடிவிலும் வழிபடப்பட்டார். சங்கு சக்கரம் தாமரை கேடகம் என்பவைகளைப் பிடித்திருக்கும் நான்கு கைகளுடைய திருமாலின் திருவுருவங்களும் கிடைத்துள்ளன. பாம்பின்மீது படுத்துத் துயில் கொள்ளும் திருவுருவங்கள் சிலவும் இங்குக் காணப்படுகின்றன. இலக்குமியும் சத்தியபாமையும் இருபக்கங்களிலும் நிற்கும் திருவுருவம் பாலி த்தீவிற் கண்டுபிடிக்கப்பட்டது. பூமாலை சாமரை தாமரை கரகம் என்பவைகளைக் கைகளில் வைத்திருக்கும் நான்கு முகமுடைய பிதமாவின் விக்கிரகம் யாவா விற் காணப்படுகின்றது. சேரம் (Seram) என்னும் பகுதியில் அமராய என்னுமிடத்தில் மும்மூர்த்திகளின் திருவுருவங்களோடு பொன்னாற்செய்யப்பட்ட சிவன் திருவுருவம் ஒன்றுங் கிடைத்தது. செலிபிசியில் (Celebes) சிவ வணக்கத்துக்குரிய சின்னங்கள் பல காணப்படுகின்றன. அந்நாட்டு மக்களின் |