பக்கம் எண் :

120தமிழ் இந்தியா

பழங்கதைகளின் சிவன் பாரத குரு எனப்படுகின்றார். கிறாபாட் (Crawfurd) என்பார் நியுகினியிற் காணப்படும் சமயக்கிரியைகள் சிவவழிபாட்டின் தேய்வுகள் எனக் குறிப்பிட்டுள்ளார். மேற்குப் போர்னியோவில் நந்தி, கணேசர், இலிங்கம் முதலிய உருவங்கள் காணப்பட்டன. இவைகளுடன் ஒரு பொன் இலிங்கமும் காணப்பட்டது. இங்குக் குறிப்பிடத்தக்கது.

  1 மலாய்க் குடாநாட்டிலுள்ள தீவுக்குச் சிங்கபுரம் என்னும் பெயர் அந்நாட்டு மக்களாற் கொடுக்கப்பட்டதன்று; யாவாத் தீவிற் குடியேறி அங்குநின்றும் வெளிப்போந்த தென்னிந்திய மக்களால் இடப்பட்டது. அதற்குத் தமசக் அல்லது தமசா 2 என்னும் பெயர் இருந்ததெனக் கொள்ளினும், அதுவும் இந்திய உற்பத்திக்கு உடையதாகும். சுமத்திரா என்பதும் இந்திய மக்களாற் கொடுக்கப்பட்ட பெயரே. சுமத்திரா என்பதற்கு நல்ல பொருள் என்ற கருத்து.3 கி பி. 1601 முதல் சிங்கபுரம் சிங்கப்பூர் என வழங்கப்படுகின்றது. மலாய்க் குடாநாட்டிலே கொபுரா இசுவம் (Hopura-Isuom) என்னுமிடத்தில் காணப்பட்ட கணேச விக்கிரகத்தில் தென்னிந்திய எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. அங்கு அழகிய நடராசத் திருவுருவமொன்றும் காணப்பட்டது. இன்று மலாய்க் குடாநாட்டிற் காணப்படும் மக்கள் தமிழரினின்றும் தோன்றியவர்களாவர் எனச் சுவற்றின்காம் என்னும் ஆசிரியர் கூறியுள்ளார்.

கம்போதிய மக்களின் பழங்கதைகளில் கம்புசுவாயம் பவ என்பவருக்குச் சிவன் அளித்த மேரா அல்லது பேரா என்பவளிடம் பிறந்து


  1. British Malaya-an account of the origin P. 13. F sweetenham.
2. Tamasak or Tamasha. 3. Sumatra, a name of
Indian origin (Somatra) excellent matter or substance-Ibid.