பக்கம் எண் :

தமிழ் இந்தியா121

பெருகியவர்களே அந்நாட்டு மக்கள் எனக் கூறப்படுகின்றது. கம்போதியா கொச்சின் சீனா தெற்குச் சீயம் முதலியன அடங்கிய பகுதியைச் சீனர் பூனான் (Funan) என வழங்கினர். கவுண்டினியா என்னும் பிராமணன் நாகினி சோமா என்னும் அரசகுலப் பெண்ணை மணந்து கம்போதியாவுக்கு அரசனானான் என அந்நாட்டுப் பழங்கதையுள்ளது.1 இலங்கை தென்னிந்திய கிழக்குக் கரையோரங்களில் வாழ்ந்த மக்களே கம்போதியாவிற் குடியேறினார்கள்.2 கம்போதிய அரசர், வர்மன் என்னும் பட்டப்பெயர் புனைந்து முடிசூட்டப்பெற்றனர். தென்னிந்திய பல்லவ அரசர்களும் வர்மன் என்னும் பெயர் பெற்றிருந்தனர். சந்திரவர்மன் என்னும் சம் போதிய அரசன் கி. பி. மூன்றாம் நூற்றாண்டில் இந்தியாவுக்கு வந்தான். அங்கோர்வாட் (Ankor-Vat) என்னுமிடத்திற் காணப்படும் கோவிற் கோபுரங்கள் தென்னிந்திய கோயிற் கோபுரங்களை ஒத்துள்ளன. இங்குக் காணப்படும் நடராசத் திருவுருவங்களும் பிறசான்றுகளும் இங்குக் குடியேறினோர் தென்னிந்திய மக்களே என்பதை விளக்குகின்றன.3 கம்போதிய அரசருள் பாவவர்மன் என்போன் சிறந்த சிவபத்தன். இவன் கி. பி. 616-ல் கம்பீர வாணர் என்னும் ஒரு சிவலிங்கத்தை காட்டி வழிபட்டு வந்தான். கம்போதியர் கடவுள ருள் சிவனே தலைமைபெற் றிருந்தார். பிரசார், சினெங், கறாபி


  1. The Brahman Kaundinya who married a native princes called Nagini Soma and became lord of the country on the 1st century A D. This was the beginning of the Cambedian dynasties ruling Cambodia for over 1,000 years, sharing the peninsula with the Indo China rulers of Cambodia (ultimately of Indian origin)-India and the pacific world - P. 117.

  2. Epigraphical evidence of Vocan points to South India as the home of the Indian colonists - Indian colonists in Fonen and Cambodia P. 12. C. S. Srinivasachari.

  3. Hindu Colony of Cambodia-Prof. Phanindranath.