பக்கம் எண் :

122தமிழ் இந்தியா

முதலிய இடங்களிற் சிவன் உமையோடு இடபத்தில் வீற்றிருக்கும் திருவுருவங்கள் காணப்படுகின்றன. இடபத்தின்மீது வீற்றிருக்கும் வடிவத்திலும் பார்க்க நடராச வடிவமே மக்களால் பெரிதும் வழிபடப்பட்டது. அரசரும் பொதுமக்களும் இலிங்கங்களை நாட்டியதைக் குறிப்பிடும் கல்வெட்டுகள் பல கம்போதியாவிற் கிடைத்துள்ளன.

  சீயத்திலே பாங்கொக் நகருக்கு அருகேயுள்ள குளம் ஒன்றின் பக்கத்தே காலன் இடபம் இலிங்கம் என்னும் சிலைகள் உள்ளன. 1 இவைகளின் முன்னே பொது மக்கள் சத்தியஞ் செய்தார்கள். பாச்சிம என்னும் புத்த ஆலயத்தின் வெளியே சிவலிங்கமொன்று உள்ளது. பெண்கள் இதனைச் சுற்றிவந்து துதித்துப் பிள்ளைவரம் வேண்டுகின்றார்கள். இவ்வாலயம் முன்பு சிவன் கோயிலாயிருந்ததென்பதிற் சிறிதும் ஐயமில்லை. மலாயர் யாவகர் மகமதியர் முதலிய எல்லாச் சமயத்தினரும் சிவனுக்குச் செய்வதுபோலப் பூவும் பழமும் பொங்கலும் வைத்து இவ்வாலயத்தில் வழிபடுகின்றனர். கொச்சின் சீன அரசன் ஒருவன் விசய ஈஸ்வரர் ஆலயங்கட்டி அங்குச் சிவலிங்கப் பிரதிட்டை செய்த வரலாறு கல்வெட்டிற் காணப்படுகின்றது.

  கம்போதியாவிலே சிவன்கோயில் ஒன்றிற் செதுக்கப்பட்டுள்ள கல்வெட்டிற் காணும் விபரம் பின்வருமாறு:

   யோகவர்மன், 2 ஆச்சிரமத்துக்குக் கொடுத்துள்ள முத்து, பொன், வெள்ளிக்காக, குதிரை, எருமை யானை, ஆடவர், மகளிர், பூமாலை


 1.  Short Studies in the Science of Comparative religions--Major General - T. G. R. Forlong.
  2.  Indian Cultural Influence in Cambodia - B. R. Chatterji.