பக்கம் எண் :

148தமிழ் இந்தியா

வரலாற்று ஆசிரியர்கள் கூறகின்றனர்.1

"கொடிநிலை கந்தழி வள்ளி என்ற
வடுநீங்கு சிறப்பின் முதலான மூன்றும்
கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே. (தொல். புற.33)


என்னும் தொல்காப்பியத்திற் கூறப்படும் வழிபாடுகள் முறையே திங்கள், தீ, ஞாயிற்று வழிபாடுகளே, பழங்காலப் பலிபீடங்களும் பிற்காலம் இலிங்கமாக வழிபடப்பட்டன.2 திருவண்ணாமலையில் இறைவன் சோதிவடிவாய் நின்றானென்பது இலிங்கவழிபாடு தீ வழிபாட்டினின்று தோன்றியது என்னும் ஐதீகத்தைக் குறிப்பது. முற் காலத்து ஒடுங்கிய கொடுமுடிகளுடன் நிமிர்ந்து வளர்ந்த மலைகள் இலிங்கங்களாக வழிபடப்பட்டன.3

வேந்தன்

  மக்கள் ஞாயிற்றைத் தனிப்பெருங் கடவுளாகக் கொண்ட காலத்தில் அரசன் ஞாயிற்றின் 4புதல்வனென்றும் இறந்தபின் அவன் ஞாயிற்றுக் கடவுளாக மாறுகிறான் என்றும் மக்கள் நம்பினார்கள்.5 ஆகவே அரசனின்


  1. The fire worship was borrowed from the Turanians - Short studies in the science of comparative religions; துராணியர் - ஆரியரல்லாதார்.

  2. While the stone pillar also was a primitive alter Theism - E - Britannica.

  3. The Arab sailors who saw the Phallie cone of Ceylon calling al maka and the Adam an Indo-moslam name for enphamism for the lingam - Short studies in the science of comparative religions: p. 340.

  4. God was supposed to be the king of the country. The king was only an administrator on behalf of God - Fr. Heras, The Journal of the University of Bombay - 1936.


  5, எகிப்திய அரசர் ஞாயிற்றிலிருந்து தமது பரம்பரையைக் கூறினர். அரசன் ஞாயிற்றின் பிறப்பு என்று கருதப்பட்டான், அவனுக்குக்கடவுளுக்குச் செய்யப்படும் எல்லா மரியாதைகளும் நடைபெற்றன. மரணத்துக்குப்பின் ஒவ்வொரு அரசனும் ஞாயிற்றுக் கடவுளாக வழிபடப்பட்டான். சீன அரசன ஞாயிற்றின் புதல்வன் எனப்பட்டான்.--Sun and the serpent--Oldham.
  யப்பானிய அரசு பரம்பரை ஞாயிற்றினின்றும் உண்டானதென்பது யப்பானியரின் நம்பிக்கை. இவ் ஐதிகத்தைப் பின்பற்றியே யப்பாணிய அரசன் சூரியனுக்குரிய வெள்ளைக்குதிரையிற் சவாரி செய்கிறான்.