பக்கம் எண் :

தமிழ் இந்தியா149

சமாதியின்மீது ஞாயிற்றுக் கடவுளின் அருட்குறியாக இலிங்கம் நடப்பட்டது. அவ்விடங்கள் வழிபாட்டுக்குரிய ஆலயங்களாகவும் இருந்தன. இவ்வகை ஆலயங்கள் பல எகிப்தில் காணப்படுகின்றன. ஞாயிற்றுக் கடவுளாக மாறிய அரசர்கள் எகிப்தில் றா என்னும் பெயர் பெற்றனர். றா என்பதிலிருந்து இராசன் என்னும் சொல் பிறந்ததெனச் சிலர் கூறுவர்.


நந்தி வழிபாடு


  அப்பன் என்னும் தந்தைக் கடவுளின் ஊர்தியாகிய நந்தி மேற்கு ஆசிய நாடுகளில் வழிபாட்டிற்குரியதாயிருந்தது. பலஸ்தீன் நாட்டில் ஆன்கன்று அல்லது நந்தி வழிபடப்பட்டமை கிறித்தவ மறையின் பழைய ஏற்பாட்டிற் காணப்படுகின்றது. தாவீதின்
(David) மனைவிக்கே ஆண் கன்று என்று பெயர்.1 கித்தைதி நாட்டிலே எயுக் (Eyuk) என்னுமிடத்திலே நந்திச்சிலை கருங்கற் பீடத்து வைத்து மக்கள் எல்லோராலும் வழிபடப்பட்டது. இவ் விடபக் கடவுளைச் சேவிக்கத் தனிக்குரு இருந்தார். எகிப்திய மக்கள் ஒசிறிஸ் கடவுளின் வாகனமாகிய அபிஸ் என்னும் இடபத்தை வழிபட்டார்கள். எல்லா மத்தியதரை நாடுகளாலும் இடபம்


  1. In the later periods of Jewish history, the worship of the golden calf was held in such honour, even contrivance was adopted to keep it out of sight. The name Eglah (Calf) was borne by one of Davids wives - Ancient Faiths; p. 471.