பக்கம் எண் :

தமிழ் இந்தியா151

வமாதொருபாதி இறைவன்

  அம்மை அப்பர்க் கடவுளர், பாதி ஆண் பாதி பெண் வடிவிலும் வைத்து வணங்கப்பட்டனர். இவ்வடிவு "அர்த்த நாரீசுரர்" வடிவம் எனப்படும், அர்த்தநாரீசர வடிவமே ஆதோனிஸ் என மேற்குத்திசை நாடுகளிற் வழங்கிற்று என முன் கூறப்பட்டது. இவ்வடிவம் பழைய சுமேரிய மக்களாலும் வணங்கப்பட்டது,1 மொகஞ்சொதரோ மக்கள் அப்பரை ஆண் என்றும் அம்மையை அம்மை என்றுமே வழிபட்டனர். சுமேரிய நாட்டிலும் இதே பெயர்கள் வழங்கின. அம்மை அப்பரின் புதல்வர் சுமேரியரால் என்லில் எனப்பட்டார். மொகஞ்சொதரோவில் அம்மை மீன்கண்ணி எனப்பட்டார். இப்பெயரே மீனாட்சி என வழங்குகின்றது.


பாம்பு வணக்கம்


இவ்வுலகின் எல்லாப் பாகங்களிலும் பாம்பு வணங்கப்பட்டது. மொசே வெண்கலத்தினாற் செய்த பாம்பை இஸ்ரவேலர் வணங்கி வந்த வரலாறு, கிறித்தவ மறையிற் காணப்படுகின்றது. கிறித்துவ மறையிற் காணப்படும் படைப்பு வரலாறு முதலியன சாலடிய மக்களிடமிருந்து கிடைத்தன என்று கருதப்படுகின்றன. சாலடிய மக்கள் திராவிடர்களே என்பது வரலாற்று ஆசிரியர்களது முடிவு. பாம்பு வணக்கம் இல்லாத நாடு இவ்வுலகில் இல்லை. இதனை ஆராய்ந்து விளங்கும் தனி நூல்கள் பல ஆங்கில மொழியில்
 


  1. Sumerian Triad An, Ama and Enlil - Father mother and son. Amman is called Minkanni in inscriptions "Uyarelter or Amman" - i. e. One Amman of the chariot of the Suris. This deity half man (Proper left) and half womman (Proper right) which is also found in Sumer with the name of Amma, - seems to be original idea of the Hindu Image Arthanareswara and which has the two parts put in relative position - Journal of the University of Bombay - Fr. Heras.