பக்கம் எண் :

152தமிழ் இந்தியா

எழுதப்பட்டுள்ளன. இன்றும் சில நாடுகளில் உயிர்ப் பாம்புகள் வணங்கப்படுகின்றன; சில நாடுகளில் பாம்பின் சிலைகள் வணங்கப்படுகின்றன.

  "ஆபிரிக்க மக்களின் முக்கிய தெய்வம் பாம்பு, மழையின்மை, பஞ்சம், பிணி முதலிய காலங்களில் மக்கள் பாம்புகளைச் சிறப்பாக வழிபடுகின்றனர். இவ்வகையாக உரோமரும் ஒரு காலத்திற் செய்தனர். ஒரு நிகிரோவனாவது வேண்டுமென்று பாம்புக்கு ஒருவகையான தீமையுஞ் செய்யமாட்டான். தற்செயலாய்ப் பாம்பு ஒன்றைக் காயப்டுத்துகிறவன் நிச்சயமாகக் கொல்லப்படுவான். ஒரு முறை ஆங்கிலக் கப்பற்காரர் சிலர் தாங்கள் தங்கிய வீட்டினுள் வந்த பாம்பு ஒன்றை அடித்துக் கொன்றார்கள். அதற்காக இவர்கள் அங்குள்ள மக்களால் கொடுமையாகத் தாக்கிக் கொல்லப்பட்டார்கள். பாம்புகள் உறைவதற்கெனக் கட்டப்பட்ட குடிசைகள் நாடு எங்கும் காணப்படுகின்றன. இவைகளுக்கு முதிய பெண்கள் தினமும் உணவு கொடுக்கிறார்கள். பாம்புகளுக்கு அழகிய பெரிய கோயில்களும் இருக்கின்றன. ஒவ்வொரு வகைப் பாம்பைக் கவனிப்பதற்கும் ஒவ்வொரு வேலைக்காரன் இருக்கிறான்,"

  " நியுகினி யில் சோலைகளில் பாம்புகளின் கோயில்கள் இருக்கின்றன. இவைகளுக்குப் பருவ காலங்களுக்கேற்றவாறு பன்றி, ஆடு, கோழி முதலியன உணவாக அளிக்கப்படுகின்றன1" இது பாம்பு வணக்கத்திற்கு ஓர் எடுத்துக்காட்டு.

  இவ்வணக்கம் எவ்வாறு உண்டானதென்று வரலாற்று ஆசிரியர்களால் நன்கு அறிந்து கூற முடியவில்லை. இதன் தொடக்கம் மறைவாக இருக்கின்றது. உலகில் காணப்படும் மக்கட் கூட்டத்தினர் தத்தம்


1. Rivers in life.