பக்கம் எண் :

தமிழ் இந்தியா153

குலக்குறிகளாக (Totem) மயில், ஆடு, முயல், ஆமை போன்ற யாதேனும் ஒன்றைக் கொண்டிருந்தனர்; இன்றும் கொண்டிருக்கின்றனர். இக் குலக்குறிகள் பிற்பாடு வழிபடவும்பட்டன. இவ்வகைக் காரணத்தைப் பாம்பு வணக்கத்திற்கும் கொள்ளலாமோ என்பது ஆராயத்தக்கது. இந்திய நாட்டில் பாம்பு வழிபாடு நடைபெற்று வருவதைக் கூறவேண்டியதில்லை. பாம்புச் சிலைகள் இல்லாத ஆலயங்களே இல்லை எனக் கூறலாம்.1


முருக வழிபாடு

  முருக வழிபாடு ஞாயிற்று வணக்கத்தின் இன்னொருவகை. கடல் மீதெழும் உதயகால ஞாயிறு2, மயில்மீதெழுக் தருளும் முருக னாக உருவகப்படுத்தப்பட்டுள்ளது. முருகன் என்பதற்கு இளையவன் என்று பொருள். யூதமக்களும் பகற் கடவுளை முதியபகல், இளம்பகல ் (Ba-al) என இருவகையாக வழிபட்டனர். முதிய பகல் தாடியுடைய முதிய வடிவுடனும்,


   1. Another emblem of God only once referred to is the snake. The snake one of the most common symbols of Shiva in modern Hinduism. Thus an inscription (of Mohenjo-Doro) informs us that mina meditates on the snake of the three eyed one, - Fr. Heras.

  2. The pea-cock in the banners of so many Asiatic kings and princes is generally a symbol of past or present faith of the sun - Faiths of man in all lands - Vol. 1. P. 28.

   குறிப்பு : சிவனைக் குறிக்க ஒரு முக்கோணமும், துர்க்கையைக் குறிக்க ஒரு முக்கோணமும் வழங்கினவென்றும், சிவனைக்குறிக்கும் முக்கோணம் நிமிர்ந்தும் துர்க்கையைக் குறிக்கும் முக்கோணம் கவிழ்ந்தும் இருந்தனவென்றும், இவ்விரண்டையும் அவ்வாறு சேர்த்து வைக்குமிடத்து அறுகோணம் உண்டாகின்றதென்றும், இவ்வறுகோணமாகிய வடிவு பிற்காலத்தில் கொற்றவையும் சிவனும் சேர்வதால் தோன்றிய அறுமுகக் கடவுளாகக் கொள்ளப்பட்டதென்றும் சிலர் கருதினர். மேற்கு ஆசியாவில் பகல், அசெறெக் என்னும் அம்மை அப்பரைக் குறிக்க நிமிர்ந்த கவிழ்ந்த முக்கோணங்கள் பயன் படுத்தப்பட்டன. இஃது ஆராயத்தக்கது.