இளம்பகல் குழந்தை வடிவுடனும் வழிபடப்பட்டன யூதமக்களுக்குச் சமய அறிவு கொளுத்தியவர்கள் தமிழ் மரபைச் சேர்ந்தோர் எனப்படுகின்றமையின் அவர்களிடையே தமிழர்களுட் காணப்படும் பல கொள்கைகள் நிலவின. இளம் கடவுள் யூதரால் போர்க் கடவுளாகவும் கொள்ளப்பட்டது. இளம்பகலே பின் உரோமரின் மார்ஸ் என்னும் போர்க் கடவுளாகவும் மாறிற்று. முருகக்கடவுளுக்கும் அசுரர் எனப்பட்ட மக்களுக்கும். இடையில் நிகழ்ந்த போர்கள் என்பன முருக வழிபாட்டினருக்கும் சிவவழிபாட்டினருக்கும் நிகழ்ந்த போர்களாகும். அசுரர் சிவவழிபாட்டினர் என்பது முன்னமே கூறப்பட்டது. யெகோவா என்பது எல் கடவுளையே குறிக்கும் பெயரென ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர். யெசோவா வழிபாட்டினர் எல்லின் வேறுவகை வழிபாடுகளாகிய பகல் (Ba-al) மொலொச் முதலிய வழிபாடுகளை அழிக்க முனைந்து நின்ற வரலாற்றுடன் இதனை ஒப்பு நோக்குக. மக்களிடையே நிகழ்ந்த போர்கள் மக்கள் வழிபட்ட தெய்வங்கள் மீது ஏற்றிக் கூறப்பட்டன. வேத பாடல்கள், இந்திரன் தாசுக்களின் செல்வங்களைக் கொள்ளைகொண்டு அவர்களை அழித்தானென்று கூறுகின்றன. ஆரியமக்கள் தாம் பெற்ற வெற்றிகளைத் தாம் வழி பட்ட கடவுள்மீது ஏற்றிக் கூறியிருத்தல் காண்க. இவ்வாறு கூறுதல் அக்கால மரபு போலும். மால் வணக்கம் மால் (மா + *எல்) வணக்கமும் ஞாயிற்று வணக்கத்தின் இன்னொரு வகை. திருமாலின் கையில் இருக்கும் சக்கரம் ஞாயிற்றையே குறிக்கின்றது. * எல் என்பது அல், அல்லா, அலி முதலிய சொற்களாகத் திரிவதைக் காணலாம். மால் என்பதிலுள்ள அல் எல்லின் வேறு பாடே. |