"அரியல்லாற் றேவியில்லை ஐயனையாறனார்க்கே", பெருமாள் (பெருமானின் பெண்பால்) என வருவன ஆராயத்தக்கன. ஒரு போது கரிய தாய்க் கடவுள் மாஎல் என வழிபடப்பட்டதோ என்பது சிந்திக்கத்தக்கது. பாரத காலத்துக்குப் பின் திருமால் வழிபாடு கண்ணன் வழிபாடாக மாறியுள்ளது. திருமால் மூவுலகை அளந்தாரென வரும் புராணக்கதை ஞாயிறு காலை, நண்பகல், மாலை என்னும் மூன்று காலங்களிற் செல்லும் செலவினை உணர்த்துமெனக் கூறப்படுகின்றது. சிவன் ஞாயிறே சிவன் என்னும் பெயரால் ஆதியில் வழிபடப் பட்டதென்பது உலகமக்களின் பழைய வரலாறுகளை நோக்குமிடத்து நன்கு புலனாகும்.1 "அருக்கன் பாதம் வணங்குவர் அந்தியில்-அருக்கனாவான் அரனுருவல்லனோ" (திருநா--தே) என்பதும் இதனையே உணர்த்தும். ஞாயிறு, ஆண்டின் ஒவ்வொரு மாதத்திலும் ஒவ்வொரு வீட்டில் தங்கும். ஒவ்வொரு வீட்டில் நிற்கும்போதும் அது வெவ்வேறு வடிவில் வழிபடப்பட்டது.2 ஆகவே, ஒவ்வொரு திங்களும் ஒவ்வொரு கடவுளுக்கு 1. It may be noted at the outset that the sun was identified with Siva (perhaps also with Vishnu) and the Suriaserana really means the worship of Siva in the form of the sun. "It is interesting as showing the identity of Siva and Surya and there by explaining the inner significance of the Surya worship." Ancient Indian Colonies in the far East. Vol. 2, pp. 1067. 2. The Assyrians had twelve great gods clearly corresponding to the twelve houses or months of fertility - Rivers in life - P 2. Now the sun in the course of the year travels through the constellations of the zodiac, which were called houses accordingly each month of the sun being in a different house was supposed to take a different form and since the constellation of the Proto-Indians as said above were eight Images of the supreme being under these forms were worshipped in different parts of the country - Fr. Heras. எகிப்தில் ஆண்டின் ஒவ்வொரு திங்களும், வாரத்தின் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கடவுளுக்குப் பரிசுத்தமானவை........கெரதோதசு (Heradotus). 1. Calandar - En, Britannica. 2. The civilization of Babylon and Assyria-pp. 484, 512. |