உரித்தாக்கப்பட்டிருந்தது. இவ்வழக்கு மேற்கு ஆசிய எகிப்திய இந்திய நாடுகளுக்கெல்லாம் பொது. எபிரேய மக்களின் ஆண்டின் மூன்றாவது மாதம் சிவன் என அறியப்பட்டது.1 ஆசியாவிலும், பபிலோனிலும் ஆண்டின் மூன்றாம் மாதம் சிவன் அல்லது சிமானு எனப்பட்டது. பபிலோனில் இதே பெயருடைய இடம் ஒன்றும் இருந்தது. இஃது அங்கே களிமண் ஏடுகளில் எழுதிவைக்கப்பட்ட உறுதி (documents) களிற் காணப்படுகின்றது,2 இதனால் பபிலோன் ஆசியா பலஸ்தீன நாடுகளில் சிவன் என்னும் பெயரால் வழிபடப்பட்ட கடவுள் ஒன்று இருந்ததென்பது தெள்ளிதிற் புலப்படும். அரேபியரும் யூதரும் சாலடியாவிலுள்ள ஊர் என்னும் நகரினின்றும் சென்று கானான் தேசத்திற் குடியேறிய ஆபிரகாமின் (கி. மு. 2153) சந்ததியினர் என்று கூறப்படுகின்றனர். ஆகவே யூத மக்கள் சாலடியரைப் பின்பற்றியே திங்கட் பெயர்களையும் வழங்கினார்களாதல் வேண்டும். சாலடியாவில் இப்பெயர் சாலப் பழையதாய் வழங்கினமையினாலேயே அது திங்களுக்குப் பெயராக்கப்பட்டது. பபிலோன் மக்களும் பலஸ்தீனரும் எல்சடை என வழங்கிய கடவுள், சிவனைப் போலவே மலைமுகடுகளிலிருப்பவராகக் காணப்படுகின்ற 1. Calandar - En, Britannica. 2. The civilization of Babylon and Assyria-pp. 484, 512. |