பக்கம் எண் :

158தமிழ் இந்தியா

யேகோவா என்னும் சொல் சிவா என்பதுபோன்ற ஹெவா, செவா என்னும் சொற்களினின்றும் பிறந்த தென ஆராய்ச்சியாளர் கூறகின்றனர்.1 எகிப்திலே சிவன் என்னும் பாலைநிலப் பசுந்தரை ஒன்று உண்டு. இங்குப் பழைய அமன் ஆலயம் ஒன்று காணப்படுகின்றது. அமன் எகிப்தியரின் ஞாயிற்றுக் கடவுள். அமன் வழிபாடு பண்டு நாட்டினின்றும் சென்றதாக அவர்கள் வரலாறுகளிற் காணப்படுகின்றது. அமன் வழிபாடு சியஸ் (Zeus) யூபிதர் வழிபாடுகளாகக் கிரேக்க உரோமை நாடுகளில் வழங்கிற்று. சியஸ் யூபிதர் வழிபாடுகளும் ஞாயிற்று வழிபாடுகளே. இப் பாலைவனப் பசுந்தரையில், ஞாயிற்றுக் கடவுள், சிவன் என்னும் பெயரால் வழிபடப்பட்டமையினாலேயே அதற்குச் சிவன் என்னும் பெயர் உண்டாயிற்று என எளிதில் ஊகித்தறியலாம். சிவன் என்பதே அமன் எனப் பிற்காலந் திரிந்து வழங்குதல்கூடும். அமன் (Amon) என்பதே கிறித்தவர்கள் வழிபாட்டு முடிவில் கூறும் ஆமென் எனத் திரிந்து வழங்குகின்றதென்பது வரலாற்று ஆசிரியர்கள் சிலரது கருத்து. மேற்கு ஆசியாவில் இடங்களுக்கும் மாதத்துக்கும் மாத்திரமன்று; மக்களுக்கும் சிவன் என்னும் பெயர் இட்டு வழங்கப்பட்டது. 2சொய்றோ ரோயிஸ் என்னும் சுமேரிய அரசனது மனைவியின் பெயர் சிவன். இவளுக்கு மாத்திரம் சிவன் என்னும் பெயர் இடப்பட்டதெனக் கருதுதல் கூடாது. அக்கால மக்கள் பலருக்கு இப்பெயர் இட்டு வழங்கப்பட்டதென்றும் அம்மரபுபற்றி இவளுக்கும் இப்பெயர்


1. Accordingly to Hebrew scholars the name Jehovah is to be derived from the stem Havah and this we take for the modified form Chava.--Book of the beginning.
2. Wife of Chosroroos ii - Twin Rivers p. 129 - Seton Lloyds.