பக்கம் எண் :

தமிழ் இந்தியா159

கொடுக்கப்பட்டதென்றும் நன்கு உய்த்தறியலாகும். அமெரிக்காவிலே கொலறடோப் பள்ளத்தாக்கிலுள்ள பீடபூமியில் பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சிவன் ஆலயம் கண்டுபிடிக்கப்பட்டது. கிரேக்கரின் சியஸ் என்னும் கடவுட் பெயரும் சிவன் என்பதன் திரிபே. இது, சியஸ் மலையில் இருப்பவராயும் மூன்று கண்களுடையராயும் கூறப்படுதலால் நன்கு அறிதும். யூபிதர் என்னும் பெயரும் செவா என்னும் அடியாகப் பிறந்ததென ஆராய்ச்சியாளர் கூறுவர்.1 உக்கிரோ பின்னிய துரானிய மொழிகளில் சிவன் சிவோ என வழங்கும். லாப்பியரின் காத்தற் கடவுள் சிவன். துருக்கிமொழியில் செவ் என்பது அன்பை உணர்த்தும். அக்கேடிய மொழியில் செ கருணையையும், செப் உள்ளத்தையும் உணர்த்தும் ஆரிய மக்களிடைய வேதகாலத்தில் சிவாக்கள் (Sivas) என்னும் ஒரு கூட்டத்தினர் இருந்தனர். பாணினியின் இலக்கணத்திற் கூறப்பட்ட சிவபுரம், இவர்களின் நகரமாகலாமெனக் கருதப்படுகின்றது. மெசபெதேமியாவிலே பழைய பபிலோன் மக்களின் மரபினராகிய சிறுகூட்டத்தினர் சிலர் காணப்படுகின்றனர். இவர்கள் கபில் சிவா, றபில் சிவா என்னும் கடவுளரை வணங்கினர். பழைய


   1. Jupiter traced fervo. The direct Assyrian denomination however of the planet is lost in the gulf of time from the Chaddie Sevah - History of Hindustan p. 239 - Author of Indian antaquities.

  2. Ugro - Finnic and other Tunarnian dialocts Zive or Sivo - and Siva is protecting deity among the Lapps. The Turkish sev kind, Akkadion Se - favonr, sub-heart - Faiths of man - p. 308/ Forlong.

  3. The place Sivapura - connected with - Panini might have been named after them. Mr. A. C. Das suggests that they might have been the worshippers of Siva or Phallus-History of Pre-Musalman Indian-p. 185.