இலங்கை அரசர் பலர் சிவன் என்னும் பெயரைத் தமது பெயரின் இறுதியிற் சேர்த்துவழங்கினர். அரசரல்லாத சிலருக்குச் சிவனென்றும் பெயரிருந்தமை மகாவமிசமென்னும் புத்த நூலாலறியப்படுகின்றது. சிவன் ஒளிமலை என்னும் பெயர் புத்தர் காலத்துக்கு முற்பட்டது. கிரேத்தா (Crete) விலுள்ள ஓர் இடத்துக்கும் சிவன் என்று பெயர். மரவணக்கம் மரங்களின்கீழ் கடவுள் வடிவங்கள் வைத்து வழிபடப் பட்டமையின், மக்கள் மரங்களிலும் கடவுள் உறைவதாக நினைந்து அவைகளை வழிபடலாயினர். இவ்வணக்கமும் உலகம் முழுமையிலும் காணப்பட்டது; இன்றும் காணப்படுகின்றது.1 இன்று கிறித்தவரின் தேவாலயத்துக்கும் பெயராக வழங்கும் சேட்ச் என்னும் பெயர், கருவாயி மரத்தைக்குறிக்கும் கேர்க் என்னும் சொல்லினின்றும் பிறந்ததென ஆராய்ச்சியாளர் காட்டியுள்ளார்கள்.1 மரவணக்க த்தில் மரங்களின் உச்சிக்கிளைகள்மீது ஆடைத் துண்டுகளைக் கொடிபோலக் கட்டி பறக்கவிடுவது வழக்கு. நடராச வணக்கம் நடராச வடிவில் இறைவனை வழிபடும் வழக்கு மொகஞ்சொதரோ 1. Africa is full of tree worship. because Bruce found trees adorned with streamers flags or tags and with altars at their base, where meats, grain, wine and oil were offered. Rivers in Life Vol. 2 p. 456. 2. Trees were worshipped by the ancient Celts, and Brosses even derives the word kirk now softened into church, from quercus, an oak the species being peculiarly sacred - The Origin of civilization and the Primitive condition of man Lubbock p. 213. |