பக்கம் எண் :

தமிழ் இந்தியா161

காலத்திலேயே காணப்பட்டது.* அங்குள்ள முத்திரைகளில் இறைவனைக் குறிக்கத் தாண்டவன் என்னும் பெயர் பொறிக்கப்பட்டுள்ளது; அரசன் ஒருவன் தானே ஒப்பற்றவன் என்னும் பெருமிதத்தினால் ஆடும் ஆடலை இவ்வடிவம் குறிக்கின்றது. காலின் கீழ் ஒருவனை மிதித்து நிற்றல் ஒன்னார்த்தெறல் என்பதையும், அமர்த்தி நிற்கும் கரம் அடைந்தாரை ஆதரித்து அடைக்கலம் காத்தலையும் குறிக்கின்றன. தம்மைப் பணியும் சிற்றரசர்கள் முடிமீது தமது காலைத்தூக்கி வைத்து அருள்வது அக்காலப் பெருமன்னர் மரபு. அவ் வழக்கே திருவடித்திக்கை யுமாம்.

கோவில்

  மரங்களின்கீழ் இருந்த அருட்குறிகளைச் சுற்றிக் கற்களை அடுக்கி மதில் அல்லது வேலி செய்வதிலிருந்து கோயில் ஆரம்பமாயிற்று. மனிதனின் வீடு ஒன்றைப் பார்த்து அமைக்கப்பட்டதே கோயில ்.1 கோயில் என்பது அரசனின் வீடு எனப் பொருள்படும். ஆலயம் கோயில் எனப்பட்டதுபோலவே அரசனது இல்லும் கோயில் எனப்பட்டது.2 மொகஞ்சொதரோவில், சிறிய அறைகளும் தடித்த சுவர்களுமுடையதாகக்


*மொகஞ்சொதரோவில் "தாண்டவன் இர் நால் மரம்" என ஒரு பட்டையத்திற் காணப்படுகின்றது. நாலு மரங்களுக்கிடையில் தாண்டவமாடும் கடவுள் இருக்கிறார் என்பது இதன்பொருள். "Thandavan is among the four trees I. E. this shows that the idea of God/ dancing as the sources of all the movement of the universe is a very old one.--The Journal of the University of Bombay-Fr. Heras.

"1. The Temple was the house of the Gods copied from a bannan house-Translations of the 3rd international congress of the History of Religions - Vol. I. P. 187-Flinders Petrie.

2. The recent excavations in Punjab and sind show that the temple was a familiar institution in the 3rd millennium before Christ. "The temples", says Sir John Marshall, stand on clevated ground and are distinguished by the relative small-ness of their Chambers and the exceptional thickness of their walls, a feature, which suggests that they were several storeys in height. Anessay on the origin of the South Indian Temples - N. Venkata Ramanayya, M. A., Ph. D.