பக்கம் எண் :

தமிழ் இந்தியா163

அல்லது வட்டமான கல் வேலிகளின் நடுவே இலிங்கமும் அதன் முன்னால் பலிபீடமும் வைத்து வழிபடப்பட்டன. இவ்வகைக் கல்வேலியின் ஒருபுறத்தே மூன்று கல்லினால் எடுக்கப்பட்ட கட்டிடங்கள் (கவிழ்ந்த ப போன்றன) பொனிசியா விற் காணப்படுகின்றன. இக்கொள்கையை அடிப்படையாகக்கொண்ட பாபிலஸ் (Babel) பால்பெக் 1 ஆலயங்கள் எழுந்தன. மெக்காவில் உள்ள காபா ஆலயம் முற்கூறியவகை ஆலயத்துக்கு உதாரணமாகும்" என சீரியாவில் கற்களிற் காணப்படும் வரலாறு என்னும் நூல் கூறுகின்றது.2

  தென்னிந்தியாவில் மிகப் பழைய ஆலயங்களின் அழிபாடுகள் காணப்படவில்லை. தென்னிந்தியாவில் ஆலயங்கள் மரத்தினாற் கட்டப்பட்டனவென்றும், பின்பு அம்மாக் கோயில்களின் அமைப்பைப் பின்பற்றி கல்லினால் ஆலயங்கள் எடுக்கப்பட்டனவென்றும், அதனாலேயே மிகப் பழைய ஆலயங்களும் அவைகளின் அழிபாடுகளும் தென்னிந்தியாவிற் கிடைக்கவில்லையென்றும் பழைய கட்டிடங்கலை ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர். தென்னிந்திய கட்டிடக்கலை ஆராய்ச்சியாளருள் சிறந்த யாவு தெபுருஇல
(Jouvean Dubreuil) என்பார் தென்னிந்திய கட்டிடக் கலையைப்பற்றிக் கூறியிருப்பன. சில பின்வருவன: "திராவிடரின் கட்டிடக்கலை 1500 ஆண்டுகள் வரையில் மற்றைய நாட்டு


  1. சீரியாவிலுள்ள மாபெரும் ஞாயிற்றுக்கோயில்.
  2.
The original temple in which the cone and its shrine or the altar were placed was but a cromdeeh or enclosure squire or round, made by setting up stones. The remains of such enclosures with adolmen on one side are found........in Phoenicia. It was with this sacred ideas of sacred enclosure or gilgal, with its pillar or Metzebath that Hypaethral temples of Byblus and Baalbek developed. The original temple at Kaaba at Mecca with sacred stone to Hobal was another such temple-Syrian stone lore.