அவ்வகைக் கலையினால் பாதிக்கப்படாது தனிமையாக நின்றது. இது மற்றைய நாட்டவரின் கட்டிடக் கலைகளினின்றும் எதையும் கடன்பெறவில்லை. இது படிப்படியே வளர்ச்சியடைந்திருக்கின்றது. திராவிட நாட்டின் ஒவ்வொரு காலத்துக் கட்டிடங்களையும் நோக்கும்போது அவைகளின் அமைப்பு மெதுவாக வளர்ச்சி யடைந்துள்ளதென்று விளங்குகின்றது. இது மனிதர்நூலார் குரங்குபோன்ற மனிதனுடைய மண்டை முதல் இன்றைய மனிதனின் மண்டை வரையில் படிப்படியாக வளர்ச்சியடைந்து வந்துள்ளமையைக் காட்டுதல் போன்றது. மாமல்லபுரத்தில் காணப்படும் தேர்களுக்கும் திருப்பாப்புலியூரிற் காணப்படும் தேர்களுக்கும் மாதிரியில் வேறுபாடு உண்டு. இது கொறமரங்கன் 1 மனிதன் மண்டைக்கும் இன்றைய மனிதன் மண்டைக்குமுள்ள வேறுபாடு போன்றது. "கற்சிப்பிகள் தம் முன்னோர் தமக்குக் கற்பித்த பரம்பரை முறைப்படியே கட்டிடங்களை அமைத்தார்கள். தமிழிலே வழங்குகின்ற எழுத்துக்களின் வடிவுகள் காலந்தோறும் மாறுபட்டு வந்துள்ளன. இதுபோலவே மொழியும், மொழி வழக்குகளும், மக்களின் பழக்கவழக்கங்களும் மாறுபட்டு வந்துள்ளன; சமயமும் கிரியை முறைகளும் சமயக்கோட்பாடுகளும் தணிவுபெற்று வந்துள்ளன. மிகப் பழைய உருவச்சிலைகளுக்கும் இன்றைய அவ்வகைச் சிலைகளுக்கும் வேற்றுமை 1. கொறமாங்கன் என்னும் மனிதன் இன்றைய மனிதனுக்கு ஒரு படி முன் வாழ்ந்தான். இவ்வினத்தைச் சேர்ந்த மக்கள் ஆசியாவிலோ ஐரோப்பாவிலோ தோன்றி 25,000 ஆண்டுகள் வரையில் ஐரோப்பாவில் பரம்பினார்கள். இம்மக்களின் எலும்புகள் பிரான்சிலுள்ள கொறமாங்கன் என்னும் மலைக்குகையிற் காணப்பட்டது. ஆகவே அவர்கள் குறோமங்கன் மக்கள் என மாந்தர் நூலாரால் வழங்கப்படுவர். |