காணலாம். நில நூலார் நிலத்தில் அடுக்கு அடுக்காகக் காணப்படும் பாறைகளைப் பார்த்து அவற்றின் வயதைக் கூறுகின்றார்கள். இதுபோலவே கட்டிடக்கலையில் தேர்ந்த ஒருவனுக்குக் கட்டிடங்களிற் காணப்படும் கூடு, அல்லது போதிகையின் வடிவங்கள் ஆராய்ச்சிக்குப் போதுமானவை. இது பாறைகளிற் காணப்படும் தொல்லுயிர்களின் என்புக் கூடுகள் (Fossils) அப்பாறைகளை இன்ன இன்ன பாறை என்று கூறுவதற்கு நில நூலாருக்குப் பயன்படுவது போலாகும். வெர்கூசன் (Fergussion) என்பார் தென்னிந்திய ஆலய அமைப்புகள் எகிப்திய கோயில்களை ஒத்தனவென்று காட்டியுள்ளார்.1 தேஸ்ரன் என்பார் இந்தியாவின் பழைய கட்டிடங்களில் எகிப்திய சாலடிய போனீசிய அமைப்பு முறைகள் கலந்துள்ளன எனக் கூறியுள்ளார்.2 மலையாளத்தில் சில ஆலயங்கள் குடில்போல வட்டவடிவாக அமைக்கப்பட்டுள்ளன. வட்டவடிவிலிருந்தே பின் சதுர வடிவு ஆரம்பித்திருத்தல் வேண்டும். மக்கள் ஆதியில் கட்டி வாழ்ந்த வீடுகள் வட்டவடிவினவே. கருவுக்கு (கர்ப்பக் கிருகம்) மேல் உள்ளபாகம் இன்றும் வட்டவடிவாகவே அமைக்கப்படுகின்றது. முடி என்பது குடில் வீடுகளுக்கு உச்சியில் வைக்கப்பட்ட பானையேயாகும். 1. Fergussion first called attention to the striking similarity in general arrangements and conception between the great South Indian temples and that of ancient Egypt. The gopurams or gate-towers which in the later more ornate examples are decorated from the base to the summit with sculpture of Hindu Pantheon increase in size with the size of the walled quadrangles, the outer ones becoming imposing land marks, which are vissible for miles around and are strikingly similar to Egyptian Temples - Migrations of Early Culture - G. Elliot Smith. -P. 79. 2. Thus in the matter of its early buildings India has clealry been influenced by Egypt Phoenecia and Chaldia - Thurstorn. |