அரசன் இல்லத்தைச் சுற்றி அவனுடைய சுற்றத்தினர் சேனாபதியர் இருப்பதுபோலக் கோயிலின் உள் வீதியைச் சுற்றிப் பரிவார தெய்வங்களுக்கு ஆலயங்கள் அமைக்கப்பட்டன.1 ஆதியில் மரமும் இலிங்கமுங் கிணறுமாகவிருந்த ஆலயம் இவ்வாறு வளர்ச்சியுற்றது. தலவிருட்சம் இலிங்கத்தைச்சுற்றிக் கட்டிடமெழுந்தது. அப்பொழுது மரம் இடம் பெறவில்லை. எந்த மரத்தின்கீழ் இலிங்கம் ஆதியில் வைத்து வழிபடப்பட்டதோ அம்மரம் அவ்வாலயத்தின் தலவிருட்சம் எனப்பட்டது. மேற்கு ஆசிய நாடுகளிலும் எகிப்திலும் கிரேத்தாவிலும் தென்னிந்திய ஆலயங்களிற் காணப்படும் கொடிமரம் போன்ற மரத்தூண்கள் ஆலயங்களில் நிறுத்தப்பட்டு ஆண்டு விழாக்காலங்களில் கிரியைகளுடன் வழிபடப்பட்டன. கொடிமரத்தின் நுனியில் மூன்று கிளைகள் காணப்படுதல்போல அம்மரங்களுக்கும் கிளைகள் இருந்தன. தலவிருட்சமே, காலத்தில் கொடிமரமாக மாறியுள்ளதோவென்பது ஆராயத்தக்கது.2 இலிங்கம் வைக்கப்பட்டுள்ள மரங்களின் கிளைகளில், 1. (In China) The idol of the chief deity of the temple commonly, a seated human figure with distinctive atributes occupies a wooden shrine or tebernacle facing the main entrance often Gods, his associates "ministers" have their places near him or in side chapels - History of Religions - G. F. Moore. 2. In the year festival of the Assyrians the bare Pole itself was the object of ritual practices.........just as was the case in Syria and Palastine. There is considerable reason for believing that this ritual importance of a tree or tree trunk was a feature of the religion of all the peoples in the Eastern Mediterranean.... for in Crete, in Asia Minor and in Egypt similar ceremonies may be observed.......At the top (of the pole) there are four or more spreading lines which seem to intend to represent branches. Below these branches there are generally represented bands - Early History of Assyria - P. 113. |