பக்கம் எண் :

168தமிழ் இந்தியா

அடியவர்கள் பலர் இருந்தனர். அரசன் துயில்விட்டு எழுந்தது முதல் அவன் துயில்கொள்ளப் போகும்வரையில் அவன் அடியோர் என்ன என்ன பணிகளைச் செய்கின்றார்களோ அவ்வேலைகளை எல்லாம் ஐயனது அடியாரும் செய்தனர்.1 ஐயனை ச் சேவித்தலின் இவர்கள் ஐயரென்றும், கோயிற் கருமங்களைப் பார்த்தலிற் பார்ப்பார் என்றும் பெயர்பெற்றனர். அன்னோர் பழையநாளில் ஆறுதரங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தனர்.2 கிறிஸ்துவ மறையில் சேர்மையா, நேசையா என ஐயாவில் முடியும் பல பெயர்களைக் காணலாம். தமிழ்மொழியில் மாத்திரமன்று, மேற்கு ஆசிய மொழிகளிலும் ஐயர் என்பது கடவுளைக் குறித்தது. அராபி மக்கள் பபிலோன் நாட்டைச் சின்-ஐயர் என வழங்கினர். சின்-ஐயா என்பதற்கு ஞாயிற்றுக் கடவுள் என்று பொருள். பழைய கெல்திய மொழியிலும் ஐயர் என்பது கடவுளைக் குறித்தது.3


  1. So the king or priest carried out the daily routine of a servent in a house - Flinders Petrie.

  2. தொல்காப்பியத்தில் "அறுவகைப்பட்ட பார்ப்பனப் பக்கமும்" எனக் கூறப்படுவதன் பொருள் இதுவே. ஓதல், ஓதுவித்தல், ஈதல், ஏற்றல், வேட்டல், வேட்பித்தல் என்னும் அறுதொழில்களை அறுவகை எனக் கூறுதல் ஏற்றதன்று. இந்திய பழைய வரலாற்றுக் கதைகளை ஆராய்ந்த பகிதர் என்பார் பிராமணரில் மூன்று வகையினரைக் குறிப்பிட்டுள்ளார். There have been three classes among Brahmans throughout Indian history namely (1) The ascetic devotee and teacher, the Rishie or Muni (2) The priest and spiritual guide of kings, nobles and people (3) The minister of state, royal officer and these who followed secular employments-Ancient Indian Historical traditions. P. 62. F. E. Pargiter.

  3. The Arab still calls the Babylonian plain-Shin Iaa; that is sun god. For in the oldest Keltic as well as in Modern Dravidan. Tamil Iar is God; even in Ze-piter of the groves-Early Faiths in Western Asia-Forlong.