ஐயர் என்பது ஆரியர் என்பதன் திரிபு எனச் சிலர் கருதலாயினர். இது சிறிதும் பொருந்துவதன்று. தொல்காப்பியத்தில் "ஐயர் யாத்தனர் கரணமென்ப" என ஐயர் என்னும் பெயர் வந்துள்ளது. ஆராய்ச்சியாளர் ஐயர் என்பது தூய தமிழ்ச்சொல் என்றே அறுதியிட்டுக் கூறியுள்ளார.1 வடமொழிப் பிரளயம் தென் தேசத்தே படை எடுத்துவந்த ஒருகாலத்தில், தமிழ்ப்பெயர்களின் இடத்தை வடமொழிப் பெயர்கள் எடுத்தன. அவ்வாறு வந்த பெயர்களுள் பிராமணர் என்பதும் ஒன்று. இன்றும் கோயிற்றொண்டு செய்யும் குலத்தவர் ஐயர், ஐயங்கார், நம்பி, பட்டர் முதலிய தமிழ்ப் பெயர்களாலேயே அறியப்படுகின்றனர். தமிழ்நாட்டுக் குருமாரை மேற்கு ஆசியநாட்டுக் குருமாரோடு ஒப்பிட்டுப் பார்க்குமிடத்துப் பல உண்மைகள் வெளியாகின்றன. எகிப்திய குருமாரின் ஒழுக்கங்கள் பெரும்பாலும் தமிழநாட்டுக் குருமாரின் ஒழுக்கங்களை ஒத்தனவென்பது கெரதோதசு கூறியுள்ளவைகளால் விளங்கும்.2 1. Aiyer is the term employed and it is either a corruption of Aryar or is a derivative form ஐ meaning வியப்பு (Tholkappyam) and denotes men who ovoke admiration - Sera Kings of Sangam Period - P. 148. K. G. Sesha Aiyar. ஐயா என்னும் சொல் மொகஞ்சொதரோ முத்திரைகளிலும் காணப்படுகின்றது. அங்கு அது கோயிற்குருவைக் குறிக்கின்றது. ஹெரஸ் பாதிரியார், "மீனனிர்மாறு அடுஇர்ஜபன்செறி தல்தல்வ" என மகஞ்சொதரோ முத்திரையில் பொறிக்கப்பட்டிருத்தலைக்காட்டி அதற்கு "மீனவரின் பகைவர் மறியற்படுத்தப்பட்ட அரசகுரு" என்று பொருள் எழுதியுள்ளார். "Minanir maru adirayyan sere taltalva - (the object of) the hostility of Minnas is the imprisoned illustrious ruler who is a Priest" - The Journal of the University of Bambay - July 1936 - Fr. Heras. 2. ஒவ்வொரு மூன்றாம் நாளும் (எகிப்திய குருமார் பேன் முதலிய அழுக்குகள் இராதபடி உடல்முழுவதையும் மழித்துக்கொள்கின்றனர். அவர்கள் சணல் ஆடையை உடுப்பார்கள். காலில் மிதியடியைத் தரிப்பார்கள். மிதியடி பைபிலஸ் (Byblus) என்னும் மரத்தினாற் செய்யப்பட்டது. அவர்கள் வேறுவகையான ஆடையும் மிதியடியும் பயன்படுத்துதல் கூடாது. அவர்கள் பகலில் இருமுறையும் இரவில் இருமுறையும் நீராடுவார்கள். சுருங்கக் கூறுமிடத்து அவர்கள் பல கிரியைகள் புரிகின்றனர். அவர்கள் தமது சொந்தப்பொருளைச் செலவிடுவதில்லை. அவர்களுக்காகப் புனித உணவு ஆக்கப்படுகின்றது. குருமார் பலர் கடவுளுக்குப் பணிவிடை செய்கின்றனர். அவர்களுள் ஒருவர் தலைமைக் குருவாய் இருப்பார். குரு ஒருவர் மரணமானால் அவர் புதல்வன் அவ்விடத்துக்கு வருகின்றான். எகிப்தியர், பருகும் கிண்ணங்களைத் தினம் சுத்தஞ் செய்கின்றனர். இதனைச் சிலர் செய்தும், சிலர் செய்யாதும் விடுகின்றார்களல்லர். அவர்கள் எப்பொழுதும் தோய்த்துலர்ந்த சணல் ஆடையை உடுக்கின்றனர். விரதமிருந்த பின்பே எல்லோரும் பலி செலுத்துகின்றனர் - ஹெதோதஸ். அறுவகைப் பார்ப்பனப் பக்கம் என்பதற்கு உதாரணம் இன்றைய உரோமன் கத்தோலிக்க குருமார்களிடையே காணப்படுகின்றது. |