பக்கம் எண் :

170தமிழ் இந்தியா

புரோகிதர்


  ஐயர், மக்களுக்கு சமயப் பொருளில் வழிகாட்டியாகவிருந்தார். அவர் இறந்தவர், இருப்பவர்களுடைய நன்மையை முன்னிட்டுப் பல கிரியைகளைச் செய்ய ஆரம்பித்தனர். மக்கள் அவர் புரியும் கிரியைகளில் அளவுகடந்த நம்பிக்கை வைத்தனர். மக்களை எல்லாத் தீமைகளினின்றும் காப்பவர் என்னும் பொருளில் அவர் புரோகிதர் எனப்பட்டார். சோதிடம், வான ஆராய்ச்சி, மந்திரவித்தை முதலியவைகள் எல்லாம் முற்காலத்திற் குருமார்களிடத்திலேயே இருந்தன. இதனால் பொதுமக்கள் குருமாருக்குப் பெரிதும் அடங்கி நடந்தார்கள். இது உலக வரலாற்றில் எல்லா நாடுகளிலும் காணப்பட்ட உண்மை. புரோகிதன் அரசனது உறுதிச் சுற்றங்களுள் ஒருவனாகவும் இருந்தான். அரசர் அவைகளில் ஐயருக்குத் தனிப்பட்ட மதிப்புக் கொடுக்கப்பட்டது. அரச சபைகளில் ஐயருக்குத்