தனது கருத்துக்களை எடுத்துக்கூறும் அதிகாரம் இருந்தது.1 ஐயரும் புரோகிதனும் ஆரியன் என்று நினைப்பது தவறுடைத்து. கோயிற் கிரியைகள் ஓர் அரசனுக்கு அவன் வேலைக்காரன் நித்திரைவிட்டெழுந்தது முதல் நித்திரைக்குச் செல்லும்வரையில் என்னென்ன வேலைகளைச் செய்தானோ, அவ்வகை வேலைகளை எல்லாம் கடவுளுக்குச் செய்வதே ஆலயக் கிரியைகளாகும்.2 விழாக்கள் என்பன அரசன் உலாவருங்காலத்தில் நடைபெறுவதுபோல நடத்திக் கண்டு மகிழ்தல். விழாக்களையும் நித்திய கிரியைகளையும் கொண்டு பண்டை அரசரின் வாழ்க்கையை இனிது அறிந்துகொள்ளுதல் கூடும். அவ்வத்தேச வழக்குகளுக்கேற்ப இக்கிரியைகள் 1. There appear to have been a general permit for a learned Brahman to speak his mind in any durbar; and these Brahmans often gave out their opinions most fearlessly. This privilege was similarly accorded also to men of learning - Beginnings of South Indian History, P. 139 - S. K. Aiyengar. 2. First thing in the morning, fire must be lit. a lamp carried round to the master, as they usually rose before the sunrise, then some incense burnt to give divine nourishment of perfume, incense being literally, divine food like cooking the morning meal. The masters door was then opened, obeisance was made to him, with protestations of fidelity, he was anointed, and the divine food of incense put before him. The servant then returned with assurances that he was ready to his master. After the breakfast the servant comes forward again, goes through the same obeisance and calls on him to wake up in peace, declaring that his word is law, and that he will destroy his enemies. Then the master is washed perfumed, and dressed in various cloths, anointed and decorated. The ground is sanded for him to walk on when he comes forth. Several offerings of incense and another washing represent the meals and cleaning during the day and the service is over. - Flinders Perrie. இங்கு கூறப்பட்டது எகிப்திய ஆலயங்களில் நடைபெறும் கிரியை. |