பக்கம் எண் :

172தமிழ் இந்தியா

சிறிது வேறுபடும். திருவுருவத்துக்கு நறுமணத்தைலம் தேய்த்தல், திருமுழுக்காட்டுதல், ஆடை உடுத்தல், நறும்புகையும் தீபமும் (ஆலத்தி) காட்டுதல், உணவு படைத்தல் போன்ற கிரியைகள் எல்லா நாடுகளுக்கும் பொதுவானவை. கிறித்துவ ஆலயங்களில் நடைபெறும் கிரியைகள் தென்னிந்திய ஆலயங்களில் நடைபெறுவன போன்றவே. சலமன் கட்டிய ஆலயத்தில் நடைபெற்ற கிரியைகளும் இவ்வகையின. சீரியா, றோடேசியா முதலிய இடங்களிற் காணப்பட்ட இலிங்கங்களில் பூமாலைகள் வெட்டப்பட்டிருந்தன.1 சீரியாவிலே கடாட் (Hadad) என்னும் சிவன் கடவுளுடைய இடபத்தின் நெற்றியில் பூமாலை காணப்படுகின்றது.2 இதனால் பொனீசியா சீரியா ஆபிரிக்கா முதலிய நாடுகளில் வழிபாட்டில் பூமாலைகள் பயன்படுத்தப்பட்டன வென்பது தெரிகின்றது. யூதர் வழிபாடு பழைய அக்கேடிய பொனீசிய வழிபாடுகளை


   1. The discovery of Zimbawe of soap stone cylinder of quern shape with rings of rosettes on the top and sides, which rosetts are believed to represent the sun and are common in phallic decorations. This cylinder which is considered as undoubtedly Phoenician is similar to the one found at the temple of Paphos is Cyprus which was once a leading colony. The rosetts are also similar to those on the sacred cone of the great Phoenician temple of the sun in Emesu in Syria and also to the rosettes on the Phoenician sepulchral setele in the British museum. - The ancient Ruins of Rhodesea P. 38 - R. N. Hall and W. G. Neal.

  2. The Jupiter of Syria is represented as a bearded God with phrygian cap...at his side hangs his sword in its scabboard. His right hand brandishes a double axe; his left gashes a thunderbolt consisting of six spirally twisted lines, each of which is tipped with arrow head. The bull that supports the God has a rosette on the forehead between the eyes - Zeus - P. 637 Arthur Bernard Cook.