ஒத்தது. ஆதலின் அக்காலத்து அந்நாடுகளிலும் இவ்வகைக் கிரியைகளே நடைபெற்றனவென்பது தெற்றெனப் புலப்படும். ஆலத்தி காட்டுதல் தென்னாட்டுப் பழைய வழக்கு. அரசருக்கு முன்னாலும் இது காட்டப்பட்டது. தீபம் ஞாயிற்றைக் குறிக்குமெனச் சிலர் கூறுகின்றனர்.1 மக்களின் வழிபாடு அரசனைக் காணுவதற்கு மக்கள் எப்படிச் செல்லுகிறார்களோ அப்படியே ஆலயத்துக்கும் சென்றனர். பெருமக்களைக் காணச் செல்லுமிடத்து வெறுங்கையோடு செல்வது தமிழர் மரபன்று. "போனவன் வெறுங்கையோடே போகாவண்ணஞ் சென்று ஞான சற்குருவை நன்றாய் வணங்கி நின்று" (கைவல்யம்) ஆகவே, அவர்கள் செல்லுமிடத்துக் கையுறையுடன் சென்றனர். நடுவிருக்கை என்னும் கருமிமூலம் அரசனுக்குத் தமது செய்திகளை அறிவித்தல்போல அவர்கள் தமது கையுறையை நடுவிருக்கைகளாகிய குருமார் (ஐயர்) மூலம் கடவுளிடத்தில் சேர்ப்பித்துத் தம் குறைகளையும் அவர்மூலம் உணர்த்தினர். இதற்குக் கைம்மாறாகக் குருமார் கூலியும் பெற்றனர். பத்தர்கள் கடவுளின் எதிரே நின்று அவன் புகழ்பாடிக் கும்பிட்டுக் கூத்துமாடினர்.2 மேற்கு ஆசிய நாடுகளில் இவ்வகைக் கூத்து இன்றும் நடைபெறுவதை 1. The custom of using lamps and candles in worship is very ancient having prevailed in Babylon (Baruch VI. 14) in Pagan Rome in Egypt......The lights are typical to sun - Ancient Faiths Vol. 1 - P. 444 - T. Inman. 2. We have interesting evidences of the sacred dancing which we know to have found part of the ritual of the Hebrews and Phoneicians. Indeed they still survive not only in Asia-Minor but in Palastine at Adh Dhaheryth (Debir). In 1874 I saw the village elders dancing solemnly before the shrine of their Noby. David it will be remembered danced with almost the fury of a Bacehic right before the ark. The Derwish dances also must not be forgotton and the dancing of the Jerusalame people at the feast of tabernacles mentioned in the Misbnah - Syrian Stone lore P. 100. |