பக்கம் எண் :

தமிழ் இந்தியா175

ஆதாரம் கிறித்துவ மறையின் பழைய ஏற்பாட்டிற் காணப்படுகின்றது. இராசராசன் கட்டிய தஞ்சாவூர் ஆலயத்தில் நானூறு தேவதாசிகள் இருந்தார்கள் என்று ஒரு கல்வெட்டிற் காணப்படுகின்றது. மகமத் கசனி காலத்தில் சோமநாத ஆலயத்தில் 300 தேவதாசிகள் இருந்தனர்.
 

சங்கு வாத்தியம்

  தென்னிந்திய ஆலயங்களில் சங்கு வாத்தியம் ஒரு சிறப்பு. சிவன், காதில் அணிந்திருப்பது, "சங்க வெண்குழை", திருமால் கையில் வைத்திருப்பது சங்கு. "சங்காபிடேகம்" என்னும் பெயருடன் இன்றும் ஆலயங்களில் மாபெருங் கிரியைகள் செய்யப்படுகின்றன. இந்தியமக்கள் பரிசுத்தமாகக் கொள்ளும் பொருள்களுள் சங்கும் ஒன்று. சங்கு இந்தியநாட்டில் மாத்திரமன்று; இவ்வுலகம் முழுமையிலும் தூய்மையுடையதாகக் கருதப்பட்டு ஆலயங்களில் வாத்தியமாகப் பயன்படுத்தப்பட்டு வந்தது. எலியட் சிமித் என்னும் ஆசிரியர், சங்கை வாத்தியமாகக் கொள்ளும் வழக்கம் தென்னிந்தியாவில் ஆரம்பித்துக் கிழக்குநோக்கி சீனா யப்பான் கீழைத்தீவுகள் பசுபிக்கடற்றீவுகளுக்கு ஊடாகச் சென்று அமெரிக்காவையும் அடைந்ததெனக் கருதினார்.1 கிரேத்தாத் தீவின் பழைய மக்கள், ஆலயங்களில் கடவுளை வீதிவழியே அழைத்து வரும்போது


  All alike had women allotted to their service, but the Hebrew God went beyond the Hindu, for he was cheered with wine and for long periods the male Kadashism thronged in the gantuary - Judges IX 13; Dent XIX 26; Jer. XXXV - Short Studies in the Science of comparative Religions.

  1. Ancient Egyptian civilization - G. Elliot smith P. 32.