சுவடி இப்பொழுது புளோறன்ஸ் (Florance) என்னுமிடத்தில் உள்ளது.1 ஞாயிற்று வணக்கம் எங்கெங்கு காணப்பட்டதோ அங்கு எல்லாம் சங்கு வாத்தியமும் பயன்படுத்தப்பட்டது. கடல் உயிர்களின் ஓடுகள் மிக முற்பட்டகால மக்களால் புனிதமாகக் கருதப்பட்டனவென்றும், அவற்றுள் கவடி (சோகி) போன்றவை வழிபடப்பட்டனவென்றும், கடவுள் தன்மையுடையனவாதலின் கவடிகள் மக்களால் அணியப்பட்டனவென்றும், பிற்காலங்களில் அவைகளுக்குப்பதில் அவை (சங்கு) கொடுக்கும் முத்து சீவஒளி அளிப்பன எனக்கருதி அணியப்படலாயின என்றும் கூறுகின்றனர். முத்துக்களை அணியும் வழக்கிலிருந்தே பிற்காலத்தில் சீவசத்து உடையதாகிய உருத்திராக்கம் அணியும் வழக்கு உண்டாயிற்று எனக் கருதப்படுகின்றது. முத்துநகை, முத்துப் பல்லக்கு, முத்து ஆபரணம் என்பன அரசர், கடவுளர்களுக்குச் சிறந்தனவாகக் கொள்ளப்படலாயின. துவராடை சிவன், திருமால் அடியவர்கள் துவராடை உடுக்கின்றனர். துவராடை உடுத்தற்கும் பழைய வரலாறு உண்டு. இவ்வழக்குப் பண்டைமக்கள் பலரிடையே காணப்பட்டது. சங்குவாத்தியம் எங்கெங்குப் பயன்படுத்தப்பட்டதோ அங்கெல்லாம் ஒருவகைச் சிவப்புச்சாயம் உற்பத்தியாக்கப்பட்டது.2 பொனிசிய மக்கள் சிவப்புச்சாயம் ஊட்டிய ஆடைகளை உலகின் பல பாகங்களுக்குக் 1. Ibid P. XXV. 2. In Phoenician, Greek and later times these couch shell trumpets were essentially used in the Mediterranean. European travellers have found them in actual use in East Indies, Japan, and by Alfurs in Ceram; the Paupauans of new Guienea, as well as in South Sea Islands as far as New Zealand and in many places in America. In the old and new world alike one fine, in the same close Association the Purple industry - Migrations of Early culture - G. Elliot Smith. |