பக்கம் எண் :

178தமிழ் இந்தியா

கொண்டுசென்று வாணிகம் புரிந்தனர். பொனீசியாவிற் செய்யப்பட்ட சிவந்த ஆடைகள் அக்காலத்து உயர்ந்த வாழ்க்கைப் பொருள்களுள் ஒன்றாக விருந்தன. சில சமயங்களில் அதன் விலை பொன்னுக்குச் சமனாகவிருந்தது.1 அக்கால அரசரும் பெருமக்களும் குருமாரும் இவ்வாடைகளையே உடுத்தனர். கோயில்களிலும் இவ்வாடைகள் அலங்காரத்தின் பொருட்டுத் தூக்கப்பட்டன. மோசே, யெகோவாவின் கூட்டுக்கு (விமானம்) சிவப்பு ஆடையையே பயன்படுத்தினர். குருமாரும் அந்நிற உடையை அணிந்தனர். பபிலோனிய தெய்வங்களுக்குச் சிவப்பு ஆடைகளே உடுக்கப்பட்டன. எகிப்திய பபிலோனிய அரசரும் இந்நிற உடைகளையே உடுத்தினர். கிரீசிலும் உரோமிலும் அரசரும் பெருமக்களும் குருமாரும் உயர்ந்த கருமிகளும் மாத்திரம் சிவப்பு உடை அணிந்தனர். ஏனைய மக்களுக்கு இவ்வுரிமை மறுக்கப்பட்டிருந்தது. இக்கட்டுப்பாட்டை மீறிச் சிவப்பு ஆடை அணியும் பொதுமக்கள் கடுந்தண்டனை அடைந்தார்கள்; சில சமயங்களில் கொலைத்தண்டனையும் பெற்றனர். பப்புறா (Paupra) என்னும் சொல்லே சிவப்பை உணர்த்தும் பேப்பிள் (Purple) என்னும் சொல்லாக மாறிற்று. பொனீசிய மக்கள் தமிழ் நாட்டிற் கொண்டுவந்துவிற்ற சிவப்பு ஆடை பச்சைவடம் எனப் பெயர்பெற்றது. பச்சை


  1. Tyrian purple and purple stuff were essentially articles of luxury varying in price according to times and quality. they were always costly and vied in value even with gold itself. Consequently we find them reserved for the hanging of temples or employed for the robes of priests and kings. The Babylonians are said to have devoted purple to the dress of their idols - Shells as evidences of the migrations of early culture - P. 7.

  In the Romish Church the prevalent colours for sacred dresses etc. are purple or Scarlet-Ancient Faith - P. 470.