என்பது பப்புறா என்பதன் உச்சரிப்பு வேறுபாடு எனக் கருதப்படுகின்றது. இந்திய நாட்டிலும் சிவப்பு உடை உயர்ந்ததாகக் கருதப்பட்டது. தெய்வங்களுக்குச் சிவந்த ஆடைகளே உடுக்கப்பட்டன. திருமுருகாற்றுப்படையில் தெய்வமகளிர் தம்பலப்பூச்சி போன்ற நிற ஆடை உடுப்பவர்கள் எனக் கூறப்பட்டுள்ளது. பரிபாடல், திருமால் சிவந்த பட்டாடை உடுத்தியிருப்பவராகக் கூறுகின்றது. முருகக் கடவுள் உடுத்தியிருப்பது சிவந்த ஆடை (முருகு). மற்றும் கடவுளரும் சிவந்த ஆடையையே உடுத்தியிருப்பதாகப் படங்கள் வரையப்பட்டுள்ளன. மாணிக்கவாசகர் திருப்பெருந்துறையில் தீக்கை பெற்றபோது அணிந்திருந்தது சிவப்பு ஆடை (திருவா. பு). இதனால் கடவுளர் பெருமக்கள் குருமாரின் உடைகள் சிவப்பு நிறமாயிருந்தன வென்றும், அம்மரபைப் பின்பற்றியே கடவுள் அடியார் துவர் ஆடை அணியும் வழக்கு ஏற்பட்டதென்றும் நன்கு துணியப்படுகின்றது. சுவத்திகம் சுவத்திக அடையாளம் புத்தர் காலத்துக்குப் பின்பே வழங்குகின்றதெனப் பலர் கருதலாம். ஞாயிற்று வழிபாடு, சங்கு வாத்தியம் என்பவைகளைப்போலவே இக்குறியும் மிகப் பழமையுடையது. வரலாற்றுக் காலத்துக்கு முற்பட்ட சுவத்திகம் பொறித்த பழம்பொருள்கள் தென்இந்தியாவிற் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.1 ஆதிகாலமக்கள் ஞாயிற்றைக் குறிக்கப் புள்ளடியை (X) அல்லது 1. Foot found near the French rocks near Mysore, "part of a large chatty with two ornaments coniform in shape, with a small pap in each re-entering angle and a raised garland like ring round each cross". This is evidently a Swastika, and it bears a strong resemblance to a Trojen Type of Swastika-Stone age in India - P. 43. |