டாக்டர் பாஸ்டவ் (Dr. Basedow) ஆஸ்திரேலியா இந்தியா தெற்கு ஆப்பிரிக்கா என்னும் நாடுகள் தரையால் இணைக்கப்பட்டிருந்தன எனக் கூறுவர். அவர் கூறுவது, "உயிர் நூலார் அக் கண்டத்தை லெமூரியா வென்றும், நில நூலார் கொந்வானா வென்றும் பெயரிட்டுள்ளார்கள். இக் கண்டமிருந்த இடத்திலேயே நாம் ஆதி மக்களின் தொட்டிலைத் தேடவேண்டும்," என்பதாகும். 1 றிவெற்ட் (Revert) என்னும் ஆசிரியர், சுமேரிய ஒசேனிய மொழிகள் மத்தியதரை முதல் அமெரிக்கா யப்பான் தஸ்மேனியாவரையும் சென்று இந்நாட்டு மொழிகளை இணைத்தன எனக் காட்டியுள்ளார் 2 . ஆரம்பகாலப் பொத்தகம் 3 என்னும் நூலில், எகிப்திய மொழிச் சொற்களோடு ஒற்றுமையுடைய பல மயோரிய (நியூசீலந்து) மொழிச் சொற்கள் எடுத்துக் காட்டப்பட்டுள்ளன. தேயிலர் (Tailor) என்னும் பாதிரியார் மயோரிய மொழி தமிழுக்கு இனமுடையதாதலை நன்கு விளக்கியுள்ளார். சுமேரியரும் தமிழரும் "சேர்யோன் மார்சலும் டாக்டர் ஹாலும் சுமேரிய மக்கள் திராவிட மக்களைத் தோற்றத்தில் ஒத்தவர்கள் எனக் கூறியுள்ளார்கள். இது சுமேரியரும் இந்தியரும் ஒரு தொடர்பி லுள்ளவர்களென்பதை வலியுறுத்துகின்றது. இருமக்களின் தோற்றப்பொலிவும், தலையை அலங்காரம் செய்யும் முறையும் ஒரேவகையின. அரப்பாவிற் கிடைத்த குத்துவாள்கள் சுமேரியரின் அவ்வகை வாளை ஒத்திருக் 1. India and the Pacific world p 22, Kalidas Nag. 2. Ibid P. 63. 3. Book of beginings--Gerald Massey |