கின்றன. சுமேரியர் சிந்து மக்களின் நீரருந்தும் கிண்ணங்கள் ஒரே வகையின. சிந்து மக்களின் உருளை வடிவான வெள்ளிப் பாத்திரங்கள் சுமேரியரின் கல்நார்ப் பாத்திரங்கள் போன்றன. இரு மக்களும் வாசனைப்பொடி முதலிய மேனியலங்காரப் பொருள்களை வைக்கப் பயன்படுத்திய சிமிழ்கள் ஒரேவகையின. பூச்செண்டுகள் பூமாலைகளைப் பயன்படுத்தும் வகையும், வழிபாட்டில் மிருகங்களைத் தொடர்புபடுத்தும் முறையும் இரு நாடுகளுக்கு மொத்தன. இரு நாட்டவர்களும் வண்டி செய்யும் முறையைத் தனித் தனி கண்டுபிடித்தார்களெனக் கூற முடியாது. இரு நாடுகளின் வீட்டு அமைப்புக்களையும், முத்திரை வெட்டும் முறையையும், மட்பாண்டங்களின் செம்மையையும் நோக்குமிடத்து மூவாயிரமாண்டுகளின் முன் சிந்துமக்கள் பபிலோனியரை விட உயர்நிலை அடைந்திருந்தார்கள் என்பது புலப்படும். இது இந்திய நாகரிக காலத்தின் கீழ் எல்லையாகும். அதற்கு முற்பட்ட இந்திய நாகரிக காலத்தில் வீற்றினால் பபிலோனிய நாகரிகம் தோற்றியிருத் ***** போயிருத்தல்கூடும்." 1 "இன்று காணப்படும் இந்தியன் ஒருவனுடைய முகவெட்டு ஆயிரக்கணக்கான ஆண்டுகளின் முன் வாழ்ந்த 1. The most ancient East - p. 210, - Childe. |