உலகின் எல்லாப் பாகங்களிலும் இவ்வடையாளம் சமயக்குறியாக வழங்கியதெனக் கூறி உலகப்படத்தின் எல்லாப் பாகங்களிலும் புள்ளியிட்டுக் காட்டியிருக்கின்றனர்.1 சிவன் என்னும் பெயர் ஞாயிற்றுக்குச் சாலப் பழைய பெயர் என்று முன் விளக்கப்பட்டது. சுவ என்பதே சிவ என வந்ததென மொழியாராய்ச்சியாளர் கூறுவர். சிவன் சம்பந்தமான குறி என்னுங் கருத்துப் பற்றியே ஞாயிற்றுக்குறிக்கு சுவத்திகம் எனப் பெயர் இடப்பட்டது என நாம் நன்கு உய்த்துணரலாம். சுவத்திகக்குறி ஆரியரின் இந்திய வருகைக்கு முற்பட்டது. ஹெரஸ் பாதிரியார் கூறுவது: மொகஞ்சொதரோவில் வாழ்ந்த திராவிடமக்கள் சிறிய சதுரமான நகைகளைப் பயன்படுத்தினர். அவைகளில் சுவத்திகம் பொறிக்கப்பட்டிருந்தது. அங்கு கிடைத்த பட்டையங்களிலும் இக்குறி காணப்படுகின்றது. இவ்வடையாளம் திராவிட மக்களுடையது. புதிதாக இந்தியாவை அடைந்த ஆரியர்தாம் புதிதாகக் கைக்கொண்ட பலவற்றோடு இவ்வடையாளத்தையும் பயன்படுத்தினர். இச்சுவத்திக அடையாளம் தமிழருடன்கூட மேற்கே கிரேத்தா (Crete), கிரீஸ், ஏற்றூனா (Etruna), ஐபீரியா (ஸ்பெயின்) முதலியவும் பிறவுமாகிய நாடுகளுக்குச் சென்றது. மொகஞ்சொதொரோவிலும், இலங்கையிலும் வழங்கியதுபோல அது அந்நாடுகளிலும் சுகம் என்னும் பொருளைக்குறித்தது. குடிக்கும் கிண்ணத்தில் இவ்வடையாளம் இருக்குமாயின் அது குடிப்பவனுக்குச் சுகம் தருவதாக என்னும் பொருளைக் குறித்தது. இவ்வடையாளம் ஏற்றுஸ்கிய (Etruscian) சமாதித் தூண்களிலும், கிறித்தவரின் கல்லறைகளிலும் பொறிக்கப்பட்டன. இது, 1. India, the empire of Swastika - Coronation Souvenir - Bombay, 1937 - Fr. Heras. |