பக்கம் எண் :

182தமிழ் இந்தியா

இவ்வடையாளத்தின்கீழ் அடக்கஞ்செய்யப்பட்டவர் மறுஉலகில் சுகமாக இருக்கட்டும் என்னும் பொருளைக் குறித்தது.
 

ஆகமங்கள்*

  ஆலயம் அமைக்கும் முறைகளையும், அங்கு நடக்க வேண்டிய கிரியை வகைகளையும், மக்கள் ஆலயங்களில் கடவுள் வழிபாடு செய்யவேண்டிய முறைகளையும் கூறும் நூல்கள் ஆகமங்கள் எனப்படும். வேதங்களும் ஆகமங்களும் நேர்விரோதமுடையன.1 வேதங்களிற் கூறப்படும் தெய்வங்களும் ஆகமங்களிற் கிளக்கப்படும் தெய்வங்களும் வேறு. வேதங்கள் வருணாச்சிரம தருமங்களை வலியுறுத்துகின்றன. ஆகமங்கள் சரியை கிரியை முதலியவைகளைக் கூறுகின்றன. ஆலய வழிபாடு வேதங்களுக்கு அன்னியமானது. ஆகமங்கள் வடமொழியில் எழுதப்பட்டிருத்தலின் அவை


* வழிபாட்டு முறையில் மேலோர் (ஆப்தர்) காட்டிய வழி என்பதை ஆகமம் என்னும் சொல் குறிக்கும் எனப் பேராசிரியர் எஸ். கே. கிருஷ்ணசாமி ஐயங்கார் குறிப்பிட்டுள்ளார். சிவ ஆகமங்கள் 28; வைணவம் 108.

  Agama is the Synonym of what logicians call Apta Vakyam......This would correspond to what is generally called...the practice of the disciplined.....We may define Agama generally as that which is the accepted practices of the deciplined in respect of worship. - Paramasamhita - Translation by - Dr. S. K. Aiyengar.

  1. The ancient as well as modern worship of Siva and Vishnu and Amba, are....described in the three sets of books called Agamas. They are utterly different from and opposed to the Vedic fire Cult. - Stone age in India P. 52.

  The worship of Siva or Vishnu or Sakti in temples or houses was considered a heresy by the Vedantis, till in the tenth century Yamunacharya wrote the Agama Pramanya and Ramanujacharya in the next century blended the Vaishnava rites and concepts and the Vedic practices and Vedanta tents into one whole - Ibid.