பக்கம் எண் :

தமிழ் இந்தியா185

புராணங்களை நன்கு ஆராய்ந்து, இந்திய மக்களின் வரலாற்றுக் கதைகள் என நூல் எழுதிய பார்கித்தர் என்பார் கூறியிருப்பதின் சுருக்கம் பின்வருமாறு:

  புராணக்கதைகள் எனப்படும் பழைய வரலாறுகளில் பிராமணர் கையிட்டு அவைகளை வேண்டியளவு பெருக்கியும், பிராமணக் கதைகளையும் கட்டுக்கதைகளையும் சேர்த்தும், தங்கள் சாத்திரக் கொள்கைகளையும் கிரியைகளையும் புகுத்தியும் இருக்கின்றனர். பிராமணரின் கதைகள் பிராமணருக்கு எப்படிப் புலப்படுமோ அவ்வாறு எழுதப்பட்டுள்ளன. அக்கதைகளில் பிராமணரின் கருத்துக்களும், பிராமணரின் உயர்வும், அவர்களின் புனிதத்தன்மைகளும், அவர்கள் மனிதருக்கு அப்பாற்பட்ட நிலையில் இருப்பதும், இவைபோன்றனவுமாகிய அவர்க்கு மாத்திரம் வாய்ப்புடைய கொள்கைகள் கூறப்படுகின்றன. அக்கதைகள் சிறிதும் பொருத்தமற்றன. பிராமணர்களின் பிழையினால் புராணங்கள் மதிப்பை இழந்துவிட்டன.1

  1. The Puranas naturally lent themselves to angmentations, and the Puranic Brahmans used their opportunities to the full pruly with further genuine traditions, but mostly with additions of brahmanical stories and fables and doctrine and ritual manner.

  Brahmanic tradition speaks from the Brahmanical standpoint, describes events and expresses feelings as they would appear in Brahmans, illustrates Brahmanical ideas, maintains and incalores the dignity, sanctity, suprimacy and even superhuman character of Brahmans, enunciates Brahmanical doctrines whatever subserved the interest of the Brahmans often enforeing the moral by means of marvellous incidents that not seldom are made up of absurd and utterly impossible details. It often introduces kings, because kings were their patrons, yet even so the Brahmans dignity is never forgotten.

  It is mainly Brahmanical mistakes and absurdities that have discredited Puranas. - Ancient Indian Historical Traditions - P. P. 37, 39 - F. E. Pargiter.