பக்கம் எண் :

186தமிழ் இந்தியா

வரலாற்று நூல்களாகிய புராணங்கள் பிராமணரின் கையீட்டினால் சமய நூல்களாக மாறியுள்ளன.

  சிறுவன் ஒருவன் சிறிதாயுள்ள இரப்பர்ப் பையை
(Baloon) எப்படி ஊதிப் பெருக்கச் செய்கிறானோ அவ்வாறு சிறிய அளவில் இருந்த பண்டைமக்கள் வரலாற்றை அதனிலும் பன்மடங்கு பெரிதாகப் பிராமணர் தம் சொந்த நலம் கருதிப் பெருக்கியுள்ளனர்.


இதிகாசங்கள்

   இதிகாசம் என்னும் பெயருடன் வழங்குவனவும் புராணங்கள் போன்ற பழைய வரலாறுகளே. இவ்வரலாறுகளிலும் பல கட்டுக்கதைகள் நுழைந்துள்ளன. புராணங்களில் கையிட்டதுபோலவே இதிகாசங்களிலும் பிராமணர் கையிட்டு அவைகளின் பெருமையைக் குறைத்துவிட்டனர். பார்கித்தர் கூறுவது; "பிராமணரின் கதைகள் பொதுவில் நம்பத்தக்கனவல்ல. இராமாயணத்தில் பிராமணக் கொள்கைகள் பெரிதும் காணப்படுகின்றன. கதையும் புதுமுறையாகவும் நம்பக்கூடாததாகவும் இருக்கின்றது.1"


மத்தியதரை மக்கள் எல்லோருக்கும் ஆகமம் ஒன்றே

  மேல் நாட்டு மக்கட்குலநூலார் மத்தியதரைச் சாதியினர் எனப்பிரிக்கும் பெருங்கூட்டத்தில் பொலிநிசியர், தமிழர், எகிப்தியர், பபிலோனியர், கிரேத்தாமக்கள், பழைய இத்தாலியர் முதலியோரும், இன்னும் மத்திய தரைக்கடலை அடுத்த நாடுகளில் வாழும் மக்களும் அடங்குவர். இம்மக்கள் எல்லோரும் ஒருகாலத்து ஒரு கூட்டமாக வாழ்ந்து பின்பு பிரிந்து சென்றோர்.


  1. Brahman tales generally untrustworthy for traditional history. The Ramayana is highly Brahmanical and its stories are fanciful and often absurd. - Ibid.