பக்கம் எண் :

தமிழ் இந்தியா187

மத்தியதரை நாடுகளிலுள்ள மக்களே ஒருகாலத்தில் இந்தியாவையடைந்து தமிழர் என்னும் சாதியினராகப் பெருகினார்கள் எனக் கருதப்பட்டது. பழைய மக்கள் வரலாறுகள் ஓரளவு வெளிச்சம் அடைந்துள்ள இக்காலத்து, தமிழ் மக்களே மத்தியதரை நாடுகளிற் சென்று குடியேறினார்கள் என்னுங் கொள்கை வலுத்துள்ளது. ஹெரஸ்பாதிரியார் ஆரம்பத்தில் முன்னைய கொள்கையுடையவராகவே இருந்தார். மொகஞ்சொதரோ, அரப்பாவிற் கிடைத்த ஆயிரத்து எண்ணூறு எழுத்துப்பொறித்த முத்திரைகளை வாசித்தபின் அவர் தமிழர்களே மத்தியதரை நாடுகளிற்சென்று குடியேறினார்கள் எனப் பலவகையில் ஆராய்ந்து காட்டியுள்ளார்.1


  1. After the study of the above one-thousand and eight hundred inscriptions which up to now have been deciphered by the present writer, it is easy to realize that the wave of migrations of the medtrerranean race which as supposed to have been from West to East must now be finally settled as having taken place in the opposite direction, i. e., East to West.

  The development of Mohenjo-Daro script, the religion of these two countries and that of Egypt, the titles of kings, the number of Zodiscal constellations among the Proto Indian people and the relative persion of these constellations, the changing of the Proto Indian constellations of the harp (Yal) for Turus (the bull) which might have taken place in Sumer, the tradition of ancient people of Mesopotamia recorded by Berosus, the parallel by Bibles account in Gen. ii. 1. 5 all point to the same conclusion, that the migration of the Mediterranean race commenced from India and extended through South Mesopotamia and Northern Africa; spread through Crete, Oyprus, Greece, Italy and Spain and across the Pyrenees reached central Europe and the British Isles. This route starting from Ceylon to Ireland is marked by unimerrupted chain of Dolmens and other megaliths that seem to be the relics of the enterprising and highly civilized race which is termed the Mediterranean by the anthropologists and which in India has been quite unreasonably despised under the name Dravidian. - Journal of Indian History Vol. XVI - Part - 1 - Fr. Heray.

  "மெசபெதேமியா, பாபிலோன், கல்தேயா, ஆசியா முதலிய விடங்களுக்குப் போய்க் குடியேறி இராச்சியங்களைத் தாபித்துப் பிரபலமாய் ஆண்டுகொண்டிருந்த தமிழர்கள் மிகுந்த நாகரிகமுடையவர்களாய்ப் பற்பல கலைகளிற் றேர்ந்தவர்களாய்ப் பற்பல சாதியினராய் அழைக்கப்பட்டார்கள் என்றும், அவர்கள் பேசிய தமிழ் மொழி எபிரேய, கல்தேய, பபியோனிய, அசிரிய, சுமேரிய, பாரசீக, பலுச்சிய, பேர்குயிப, பிராகிருத, துருயித்திய, அங்கிலோ, சேர்மனிய, சமஸ்கிருத பாஷைகளில் மிக ஏராளமாகக் கலந்து வருவதனால் தமிழ் மக்களே மிகப் பூர்வமக்களாய் உள்ள குடிகளென்றும், அவர்கள் பல கலைகளிலும் சங்கீதத்திலும் தேர்ந்திருந்தார்கள் என்றும், அவர்கள் இருந்த நாடு கடல்கொள்ளப்பட்ட காலத்தில் தங்களுக்குச் சமீபமுள்ள, ஆசியா, சின்ன ஆசியா, ஆபிரிக்கா, அமெரிக்கா, ஒஷினியா என்னும் கண்டங்களின் கரை ஓரங்களில் தங்கினார்களென்றும், தப்பிப்பிழைத்தவர்களின் கலைகளின் தேர்ச்சிக்கேற்றவிதமாய் அங்கங்கே சங்கீதம், சிற்பம், சோதிடம் முதலிய அருங்கலைகள் விருத்தியாகிக் கொண்டு வந்தனவென்றும் நாம் காண்பதற்கு உதவியாகச் சில சரித்திரக் குறிப்புக்களும் சொல்லியிருக்கிறேன்.

  "சுருங்கச் சொல்லுமிடத்துச் சரித்திரகாலம் ஆரம்பிப்பதற்கு வெகுகாலத்திற்கு முன்னதாகவுள்ள லெமூரியா நாடு தமிழ் நாடாயிருந்ததென்றும், அதில் வசித்தவர்கள் தமிழர்களாயிருந்தார்கள் என்றும், தமிழ் இயல், இசை, நாடகம் என்னும் முத்தமிழாக வகுக்கப்பட்டு இலக்கண வரம்புடன் மிகுந்த தேர்ச்சி யுடையதா யிருந்ததென்றும் அதன்பின்னுண்டான பிரளயங்களில் அந்நாடு கொஞ்சங்கொஞ்சமாய்க் கடலால் விழுங்கப்பட்டபின் பல இலக்கணங்களும் இசைத் தமிழைப்பற்றிச் சொல்லும் அரிய நூல்களும் கொஞ்சம்கொஞ்சமாக மறைந்து தற்காலம் அனுபோகத்திலிருக்கும் சொற்பமுறை மிஞ்சியிருக்கிறதென்றும் தெளிவாக அறிவோம்.

  "உலகத்தவர் எவராலும் இதன்மேல் நுட்பமாய்ச் சொல்ல முடியாதென்று கருதும்படி மிகுந்த தேர்ச்சிபெற்ற சங்கீத நூலைப் போலவே சிற்பம், சோதிடம், கணிதம், வைத்தியம், வாதம், யோகம், ஞானம் முதலிய அருங்கலைகளும் மற்றும் பாஷைகளில் திருப்பப்பட்டு வந்திருக்கின்றனவென்றும் நூலாராய்ச்சிசெய்யும் அறிவாளிகள் காண்பார்கள்."-- கருணாமிருத சாகரம்--ஆபிரகாம் பண்டிதர்.