விவிலிய வேதத்தின் பழைய ஏற்பாட்டில், மத்தியதரை மக்கள் எல்லோருடைய வழிபாடுகளும் ஒருவகையின என்பதற்குரிய ஆதாரங்கள் நிறையக்கிடைக்கின்றன. அவற்றுட் சிலவற்றை ஈண்டுத் தருகின்றோம். அவற்றை இன்றும் இந்தியநாட்டிற் காணப்படும் வழக்குகளோடு ஒப்புநோக்கி உண்மை ஓர்க. " யெகோவா மொசேயை நோக்கி அதிஉத்தம சுகந்த திரவியங்களாகிய சித்தமான வெள்ளைப்போளத்தில் பரிசுத்த ஸ்நானத்திற்குச் சேக்கலின்படி 5000 சேக்கலும், கருவாப்பட்டையில் அதிற் பாதியாகிய 2500 சேக்கலும், சுகந்த வசம்பு 2500 சேக்கலும், இலவங்கப்பட்டையில் 500 சேக்கலும், சீதவிருட்சத்தெண்ணெயில் ஒரு கின்னும் எடுத்து, பரிமளத்தைலக்காரனுடைய செய்கையாகச் செய்யப்பட்ட பரிமள தைலத்தைப்போல, அவைகளினாற் சுத்த தைலத்தைச் செய்வாயாக. அதுவே அபிஷேக தைலமாக இருக்கவேண்டும். அதனாலே சபையின் ஆவாசத்துக்கும், சாட்சிப் பெட்டிக்கும், பீடத்துக்கும் கிளைவிளக்குக்கும் தூபவேதிகைகளுக்கும், தகன பலிவேதிகைக்கும் அபிஷேகம் பண்ணக்கடவாயாக. ஆரோனும் அவன் புத்திரரும் எனக்கு ஆசாரியத்தொண்டு புரியும்படி நீ அவர்களுக்கு அபிஷேகம்பண்ணி அவர்களைப் பரிசுத்தப் படுத்துவாய். (யாத்-30. 22-38) (யாத். 25. 30) என் சந்நிதியில் எப்பொழுதும் பீடத்தின்மீது அப்பம் வைக்கவேண்டும். 1. Judaism is an improved form of Chaladian, Phoenecian, Greecian and possibly Egyptian worship. - Ancient Faiths P. 2 P. 294. |