பக்கம் எண் :

தமிழ் இந்தியா189

நைவேத்தியத்துக்கு ஒரு கூடையில் எண்ணெயிற் பிசைந்த புளிப்பில்லாத மெல்லிய மாவினாற் செய்த அதிரசங்களையும் எண்ணெய் தடவப்பட்ட புளிப்பில்லாத அடைகளையும் கொண்டுவரக்கடவன். அவைகளை ஆசாரியன் கொண்டுவந்து யெகோவாவின் சந்நதியில்.... பலியாக இடக்கடவன். நைவேத்தியமாகும் பொருட்டு அடுக்குந்தோறும் சுத்தகுந்துருவை இடக்கடவாய்......நித்தியமாக யெகோவாவுக்கு அக்கினியிலிடப்படும் நைவேத்தியங்களுள் அவை மிகவும் பரிசுத்தமானவைகளாகையால் அவைகள் ஆரோனுக்கும் அவன் புத்திரர்களுக்கும் உரித்தாகும்; அவைகளைப் பரிசுத்த ஸ்தானத்திற் புசிக்கக்கடவர்கள். (லேவி. 16. 12-13.) யெகோவின் சந்தியிலிருக்கும் வேதிகையிலெரியும் நெருப்புத் தணல்களினாலே தகனதூப கலசத்தை நிறைத்து, தூளாக்கப்பட்ட சுகந்த தூப வர்க்கத்தில் தன் கை நிறைய அள்ளித் திரைக்குள்ளே கொண்டுவந்து சாட்சிப் பத்திரத்தின் மேலிருக்கும் கிருபாசயத்தை மூடத்தக்கதாக, யெகோவாவின் சந்நிதியில் அக்கினியின்மேல் தூப வர்க்கத்தைப் போடக்கடவன்.

  (லேவி. 24. 1-4) யெகோவா மொசேயை நோக்கி நித்தமும் விளக்கேற்றும்படிக்கு இஸ்ரவேலர் இடித்துப் பிழிந்த சீதவிருட்சத்தின் சுத்தமான எண்ணெயை உன்னிடத்தில் கொண்டுவரும்படி அவர்களுக்குக் கட்டளையிடு. ஆரோனானவன் திரைச்சீலைக்கு வெளியே சாயங்காலம் தொடக்கம் விடியற்கால பரியந்தம் யெகோவாவின் சந்நிதியில் நித்தமும் விளக்கு ஏற்றக்கடவன்; (எண் 8. 1-4) யெகோவா மொசேயை நோக்கி ஆரோனுக்கு நீ விளக்கேற்றும்போது ஏழு தீபமும், கிளைவிளக்குத் தண்டு களுக்கு நேரே ஒளிகொடுக்க வேண்டுமென்று சொல் என்றார்.