பக்கம் எண் :

190தமிழ் இந்தியா

(நாளா 15. 15-16) யெகோவாவின் வாக்கின்படி, மொசே கட்டளையிட்ட பிரகாரம் தேவனுடைய பெட்டியைத் தண்டோடும் தங்கள் தோளின்மேல் எடுத்துக்கொண்டு வந்தார்கள்; தங்கள் சகோதரரைத் தம்புருவும், கின்னரமும், கைத்தாளங்களுமாகிய கீதவாத்தியங்கள் முழங்க ஆனந்தக் கூத்துடன் உரத்த சத்தமாய்ப் பாடும்படி ஏற்படுத்தும்படி தாவீது கட்டளையிட்டான் (க்ஷ அதி. 2) ஊது கொம்போடும், பூரிகைகளோடும், கைத்தாளத்தோடும், தம்புருவும், கின்னரமும் முழங்க இஸ்ரவேலரனைவரும் யெகோவாவின் உடன்படிக்கைப் பெட்டியைக் கொண்டுவந்தார்கள்.

  (எண். 8-10) உங்கள் ஆனந்த தினத்திலும், உற்சவ நாளிலும் மாசாரம்பங்களிலும் உங்கள் தகன பலிகளையும் ஸ்தோத்திர பலிகளையும் செலுத்தும்போது எக்காளங்களை ஊதவேண்டும். (சங். 18-5) கின்னரத்தினாலும் கின்னரத்தோடு, கீதத்தினோசையினாலும் யெகோவாவைப் பாடுங்கள். (2 சாமு. 6. 5) தாவீதும் இஸ்ரவேல் சந்ததியார் சமஸ்தரும் யெகோவாவின் சமுகத்தில் தேவதாருவினாற் செய்த கின்னரமும், தம்புருவும், மிருதங்கமும், வீணையும், கைத்தாளமுமாகிய நானாவித வாத்தியங்களையும் முழக்கினார்கள்.

  (லேவி. 2-3) ஓய்வுநாளும் மாசப்பிறப்பும் அமாவாசியும், பூரணையும், உற்சவ நாள்களும் புண்ணிய காலங்கள். அந்தக் காலங்களிலே நித்தியாக்கினியிலே இறைச்சி முதலியவைகளையிட்டுத் தகனபலி செய்தல்வேண்டும். தங்கள் சங்கற்பத்தின்படியே நியமித்த தினங்களிலே உபவசித்து விரதமனுட்டித்தல் வேண்டுமென்றுஞ் சொல்லப்பட்டிருக்கின்றது. (லேவி. 12. 1-5) ஒரு ஸ்திரி கருப்பவதியாகி ஆண்பிள்ளை பெற்றால் அசுசியின் நிமித்தம் ருதுமதியைப்போல ஏழுநாள் அசுசியாயிருக்கக்கடவள். பின் அவள்