பக்கம் எண் :

192தமிழ் இந்தியா

(இவையும் இவைபோன்றனவும், தமிழர் ஆரிய மக்களிடமிருந்து கற்றுக் கொண்டனவல்ல வென்பதற்கு மேற்காட்டியவை சிறந்த எடுத்துக்காட்டுகளாகும். பழைய தமிழ்நாட்டு வழக்குகளையே நம்மவர் தவறாக ஆரியக் கொள்கைகளெனக் கருதி வருகின்றனர்.
 

சமயத்தின் அகவளர்ச்சி

  இதுகாறும் கூறியன சமயத்தின் புறவளர்ச்சி முறைகள். சமயம் இன்னொரு வகையிலும் வளர்ச்சியடைவதாயிற்று. இதனை அகவளர்ச்சி எனக் கூறலாம். மக்கள் இவ்வுலகத்தையும், தம்மையும் ஒருங்கே இயக்கும் மேலான ஒரு பொருளையும்பற்றி ஆராயத் தலைப்பட்டனர். அவர்கள் அம்மேலான பொருள் தமது சிந்தைக்கு வராததென்றும் அதுவே எல்லாப் பொருள்களையும் இயக்குகின்றதென்றும் கண்டார்கள். ஆகவே அவர்கள் அப்பெரும் பொருளுக்கு உள்ளத்தைக் கடந்தது என்னும் பொருளில் கடவுள் என்றும், எல்லாவற்றையும் இயக்குவது என்னும் பொருளில் இயவுள் என்றும் பெயர்களை இட்டு வழங்கினர். இப்பெயர்கள் தமிழில் மிகப் பழமையுடையன. மொகஞ்சொதரோ முத்திரைகளில் கடவுள் என்னும் பெயர் இருத்தலை ஹெரஸ் பாதிரியார் காட்டியுள்ளார்.1 மொகஞ்சொதரோவிற் காணப்பட்ட திருவுருவம் ஒன்று, கடவுள், பசுபதி என்னும் கருத்தை விளக்கா நிற்கின்றது. அவ்வுருவம்


1. தமிழர் சரித்திரம் பக். 19.