பக்கம் எண் :

தமிழ் இந்தியா193

யோகத்திலமர்ந்திருக்கும் திருக்கோலத்துடனுமுள்ளது.1 இதனால் அக்கால மக்கள் முப்பொருள் உண்மைகளையும், சிந்தையையடக்கிச் சும்மாவிருக்கின்ற யோகமுறைகளையும் நன்கு அறிந்திருந்தார்களென்பன தெற்றெனப் புலப்படும். மற்றைய நாடுகளில் இவ்வுண்மைகள் அறியப்பட்டிருந்தமைக்குச் சான்றுகள் காணப்படவில்லை. தமிழ் மக்களின் சமய அகவளர்ச்சி மிக உயர்நிலை பெற்றிருந்தமையினாலேயே அவர்கள் புதிதாகவந்த ஆரிய மக்களின் சமயக் கொள்கைகளுக்கு உடம்படாதாயினர். ஆரியருக்கும், தாசுக்கள் என அவர்களால் இழித்துக் கூறப்பட்ட தமிழர்களுக்குமிடையில் நேர்ந்த போர்களுக்கு முக்கிய காரணம், தாசுக்கள் ஆரியர் தெய்வங்களை வழிபட மறுத்ததோடு அவர்கள் வேள்விகளையும் வெறுத்தமையே யாகும். இராவணன் ஆதியோர் வடநாட்டு முனிவர்கள் உஞற்றும் வேள்விகளுக்கு இடையூறாய் நின்று அவைகளை அழித்து வந்த வரலாறும் இராமாயணத்திற் கூறப்படுகின்றது.

  ஆரியர், இந்தியாவை அடைந்தபோது உலகம், உயிர், கடவுள் என்னும் முப்பொருள் உண்மைகளை அறிந்திருக்கவில்லை. மறுபிறப்பைப்பற்றியே வேதங்கள் அறியா என்று முன் காட்டப்பட்டது. வேதமதம் தத்துவக் கொள்கை
(Philosophy) இல்லாத மதம். ஆரியமக்கள் இந்திய நாட்டிற் குடியேறிய காலத்தில் ஆரியர் தமிழர் என்னும் இரு கூட்டத்தினரும் கலந்து ஒன்றுபட்டனர். அக்காலத்தில் பிராமணர் பிராமணரல்லாதார் ஆரியர் ஆரியரல்லாதார்களின்


1. A nade three face God seated in a sort of Yoga pose wearing crescentlike head gear. Round this figure several figures are placed. It has been said this is a figure of Pasupathi. - Fr. Heras.