கலப்புத் திருமணங்களைக் கட்டுப்படுத்தும் சட்டங்கள் உண்டாயிருக்கவில்லை.1 அக்காலத்தில் தமிழ்மக்களின் கொள்கைகள் பலவற்றை ஆரியமக்கள் பின்பற்றலாயினர். அவற்றுள் காட்டிற்சென்று தவஞ்செய்தலாகிய வழக்கு ஒன்று. காட்டிற்சென்று தவஞ்செய்தலைப்பற்றி இருக்குவேதத்திற் காணப்படவில்லை என ஆர். சி. தத்தர் குறிப்பிட்டுள்ளார். இதனால் இவ்வழக்குத் தமிழர்களுடையதே என்று நன்கு துணிதும். "காமஞ் சான்ற கடைக்கோட் காலை எமஞ் சான்ற மக்களொடு துவன்றி அறம்புரி சுற்றமொடு கிழவனும் கிழத்தியும் * சிறந்தது பயிற்றல் இறந்ததன் பயனே." (தொல் - கற்.51) என்னும் தொல்காப்பியச் சூத்திரமும் இதனை வலியுறுத்தும். உபநிடதங்கள் உபநிடத ங்களே தமிழர்களின் பண்டைமறைகள் என்பது முன் ஓரிடத்திற் கூறப்பட்டது. ஆரியப் பிராமணர்களுட் சிலர் உண்மைஞானங்களை அறியும் தாகம் உடையவர்களாய் இடங்கள்தோறும் அலைந்து திரிந்தனர். இவ்வாறு திரிந்த யாக்ஞவல்கியும் அவருடன் சென்ற மற்றைய பிராமணர்களும் விதேக நாட்டரசனாகிய சனகனைக் கண்டார்கள். Though the people were divided into castes, there was no restriction with regard to marriage, "when a woman has had ten former husbands, not Brahmans, if a Brahman takes her hand it is he alone who is her husband (A. V. Y. 17, 18). Brahman women were not regarded as secrosant but could be restored to their husbands after being seduced (R. V. X 109-6) curses are levelled against people who shut up Brahmanas wife (A. V. 17, 12-18) thereby proving that it was not uncommon. - Life in ancient India P. 42 - P. T. S. Iyengar. * சிறந்தது பயிற்றல்......தவஞ்செய்தல். |