பக்கம் எண் :

தமிழ் இந்தியா195

யாக்ஞவல்கி சனகனிடத்தில் மாணாக்கனாக அமர்ந்து உண்மை ஞானத்தைப் பயின்றார். இதன்பின் பிராமணர், தாம் முன்னொருபோதும் அறிந்திராத உண்மைஞானங்களை அரசமரபினரின் பாதங்களின்கீழ் மாணாக்கராயிருந்து பயின்றனர். அதப்பின்பே ஆரியருடைய மதம் தத்துவக் கொள்கையுடையதாக மாறிற்று. வின்ரணிச் 1 என்னும் அறிஞர் உபநிடதங்களைப் பற்றி ஆராய்ந்து கூறியிருப்பதின் சுருக்கம் பின்வருமாறு:

  "உபநிடதஞானம் அரசர்களிடம் மாத்திரமன்று, பெண்களிடமும் ஐயமான குலத்தவர்களிடையும் இருந்தது. ஆரியர்களுடைய நீதிநூல்கள், பிராமணன் மாத்திரம் ஆசிரியனாக அமர்ந்து மூவருக்கும் வேதங்களைக் கற்பிக்கலாம் என வற்புறுத்திக் கூறுகின்றன.2 ஆனால் அரசரும் அரசர் குலத்தவர்களுமே உயர்ந்த ஞானத்தைப் பெற்றிருந்தனர் என்றும், அவர்களிடமிருந்தே பிராமணர்


1. A History of Indian literature - M. Winternitz.
2. The Arya Veda is too pure to be touched by a Sudra or a women. A person of a Sudras or a woman of any Cast is not entitled either to learn or hear his Veda. Thus all woman as well as Sudras are not previleged to obtain salvation. The Tamil religion on the other hand is the common property of all either Men or Women. Its essence is love of god and neighbour. - Sidhanta Depika Vol. IV. P. 269.

  In the Upanishads however we find not only Kings but also women and even people of dubious discent, taking active part in the literary and philosophical aspirations of the highest knowledge. - The History of the Indian Literature P. 220.

  யாக்ஞவல்கியுடன் வாதம்புரிந்தவர்களுள் ஒருவர் வச்சக்னு என்பவரின் புதல்வியாகிய கார்கி என்னும் பெண்பாலினர்.

  In a word we may say that as we pass from the Vedas to Upanishads, we pass from prayer to philosophy from hymnology to reflections, from polytheism to monotheistic mysticiom - Constructive survey of Upanishadic Philosophy P. 3-R.D. Ranade.