பக்கம் எண் :

196தமிழ் இந்தியா

அவ்வறிவைப் பயின்றனரென்றும் உபநிடதங்கள் கூறுகின்றன. அரசர் அவ்வாறு அளித்த ஞானம் மறுபிறப்புத் தொடர்புடையது என்று கூறப்படுகின்றது. இஞ்ஞானம் பிராமணர் சிறிதும் அறியாதது. உபநிடத மென்பதற்குக் கிட்ட இருப்பது என்று பொருள். ஆசிரியன் ஒருவனிடத்தில் சில மறைவான உண்மைகளைப் படித்தற்கு மாணாக்கனாயிருத்தல் என இது பொருள்படும். அவ்வாறு கொடுக்கப்படும் ஞானம் மறை (இரகசியம்) எனப்பட்டது. உபநிடதங்கள், அம்மறையைத் தகுதியில்லாதவர்களுக்கு அளித்தல் கூடாதென வற்புறுத்துகின்றன. இதற்கு எடுத்துக்காட்டு, இம்மறையைத் தந்தை தனது மூத்த புதல்வனுக்கு அல்லது உண்மையுள்ள மாணாக்கனுக்கு அளிக்கலாம்; இவ்வுலகம் முழுவதையும் பெறுவதாயிருந்தாலும் மற்றவர்களுக்கு அளித்தல் கூடாது. ஒருவன் ஆசிரியனிடம் மாணாக்கனாக அமர்ந்து பலமுறை வருந்திக் கேட்டபோது இஞ்ஞானம் வெளியிடப்பட்டதென உபநிடதங்கூறுகின்றது." உபநிடத காலத்தை ஆராய்ச்சியாளர் பலவாறு கூறுவர்.1 றனேட் என்பார் உபநிடத காலம் கி.மு. 1200-க்கும் கி. மு. 600க்கும் இடையில் எனக் கூறுவர். இதுகாறும் மறைவாக மறை என்னும் பெயருடன் நிலவிய தமிழர்களின் உண்மைஞானங்கள் அவ்வாரிய மக்கள்வாயிலாக உபநிடதம் என்னும் பெயருடன் வெளிவரலாயின. அக்காலத்திலேயே சிவவழிபாடு ஆரியருக்குள் தலைமை பெற்றிருந்தது. ஆரியரின் உருத்திரன் என்னும் கடவுளும் சிவனும் ஒருவராகக் கருதப்பட்டனர்.2


  1. Upanishadic age to have been placed Rome where between 1200 B. C. and 600 B. C. - Constructive History of Upanishadic Philosophy P. 13 - R. E. Ranade.

  2. During the Brahmana period we notice the beginning of the regular worship of Siva......in this period Sivan or Rudra gradually became
to be one of the most important figures of the reformed Indo-Aryan Pantheon - pre - historic ancient and Hindu India P. 43 - R. D. Banerji.

  The worship of Siva or Mahadeva towards the close of this period......the new deity being identified with Rudra of the Vedic poets, the howling God of tempests, the father of the Maruts - The Philosophy of the Upanishads - P. 18. A. Edward Gough.