பக்கம் எண் :

198தமிழ் இந்தியா

சாங்கியம்


  உபநிடதங்களுக்குப்பின் தோன்றியது கபிலரின் சாங்கிய நூல். சாங்கிய மதக்கொள்கை சத்காரியவாதம் எனவும் வழங்கும். இது மாயை உள் பொருளெனக் கூறுகின்றது; வினை, வினைப்பயன்களை வலியுறுத்துகின்றது. இது கடவுளைப்பற்றி யாதும் பேசவில்லை. ஆகவே, இது நீரீச்சுர சாங்கியம் எனவும்படும். கபிலரின் நூற்கொள்கைகளுக்கு அடிப்படை உபநிடதங்கள். சாங்கிய நூல் கி. மு. 760 வரையிற் செய்யப்பட்டதெனக் கருதப்படுகின்றது. கிரேக்க தத்துவசாத்திரியாகிய பதகோரஸ் என்பவர் இந்தியாவுக்கு வந்து கபிலரின் சாங்கியநூற் கருத்துக்களைப் பயின்று அவற்றைக் கிரீசில் வெளியிட்டார் எனக்கருதப்படுகின்றது.1 புராணங்களிலே கபிலரின் வேள்விக் குதிரையைப் பிடித்துக்கட்டிய கபிலர் ஒருவர் காணப்படுகின்றார். அவர் தமிழ்மரபினர் என ஒல்ட்காம் என்னும் ஆசிரியர் ஆராய்ந்து கூறியுள்ளார்.2 கௌதமபுத்தர் கபிலர்மரபில் வந்தவரென்றும், அவர் தமிழ்மரபினரென்றும் கருதப்படுகின்றனர்.3 சாங்கிய நூல், ஒவ்வொன்றையும் நியாயவாயிலாக ஆராய்கின்றது. சாங்கியம் வேதமார்க்கத்துக்கு முற்றும் முரண்பட்டது.


  1. பதகோரஸ் சாமோஸ் (Samos) என்னும் இடத்தில் கி. மு. 570-ல் பிறந்தார். இவர் பல புதுமைகளைச்செய்து எகிப்துக்குப் பிரயாணஞ் செய்தார். கோல்பரூக் என்பார் (Colebrooke) அவர் இந்தியாவுக்குச்சென்று கபிலரின் தத்துவக்கொள்கைகளைப்பயின்று அவைகளைக் கிரேக்க மக்களுக்கு வெளியிட்டார் என்றும் கூறுவர் - Rama and Homer - P. 220 Arthur Lillie

  2. In Patala reigned the Royal Rishi Kapila Vasudeva or Kapila Nagu who destroyed the sons of Sagara. Ikshvahu, too, from so many solar Dynasties claim desent was a Rajah of Patala. - The sun and the serpent - P. 56 - C. F. Oldham.

  3. So even Bhag says (XI, 2-3) Satyavirata, king of Dravida become Vaivasvatss son Manu and his sons were Ikshvahu and other kings-Ancient Indian Historical traditions - F. E. Pargiter.

  [Sakya Buddha was a solor race, and descended from Ikshvahu-sun and the serpent] Kapilavastu was an oxford of learned Dravidians several centuries before Aryans settled in Mid-gangetic states before the Rishi Kapila about 700-600 B. C. - Short Studies on the science of comparative religions P. 12.