பக்கம் எண் :

தமிழ் இந்தியா199

புத்தம்


  கபிலருக்குப்பின் தோன்றியது புத்தமதக்கொள்கை. இம் மதக்கொள்கைக்கு அடிப்படை உடநிடதங்களும் சாங்கிய நூலும். புத்தமதம் மாயையை இல்பொருளெனக் கூறும். ஆகவே, அம்மதக் கொள்கை சூனியவாதம் எனப்படும். சாங்கியம், புத்தம் முதலிய மதங்கள், உபநிடதக் கொள்கைகள் எவ்வாறு சிறிது சிறிதாக மாறுபட்டு வெவ்வேறு மதக் கொள்கைகளாக மாறியுள்ளன என்று காண்பதற்கு எடுத்துக் காட்டுகளாகும். புத்தமதம் வேதமதத்துக்குமாறானது. புத்தரின்ஞானம் தமிழர்ஞானத்தை அடிப்படையாகக் கொண்டதென மேல்நாட்டு ஆசிரியர் தாமும் எளிதிலறிந்து கூறியுள்ளார்.1 ஆல்டன்பேக் என்னும் ஆசிரியர் உபநிடதங்கள் புத்தருக்கு
 


1. From the cradle of Goutama about Kapilavastu the early literary centre of India came most of the scriptures of Indo-Aryans which if prior to Sakya Muni must, like the philosophic schools founded by the sage Kapila have had their origin in the brain of Dravidians or Dramilian Pandits like learned Dramils Chanakya to whom was dedicated 350 years after his death, the beautiful sacred cave temple of Kanchery. - Short Studies in the science of comparative religions P. 12 [Chanakya the Dramila of Jurashtra, who is described in the Mahavanso as a Malabari. His name appears in two inscriptions of the fourth century B. C. in the Kancheri caves to which he retired in old age - Ibid P. 10.]