பக்கம் எண் :

தமிழ் இந்தியா203

திருமந்திரம்

  தமிழ் மக்களிடையே வழங்கிய உண்மை அறிவுகள் எல்லாவற்றின் திரட்டாக வெளிவந்துள்ளது திருமூலர் அருளிய திருமந்திரம் என்னும் நூல். இந்நூலிற் காணப்படும் அகச்சான்றுகளால் இதிற் கூறப்படும் பொருள்கள் தமிழ்மக்களிடையே வழங்கியவை என்பது தெளிவாகின்றது. பற்றறுத்தல், அன்பு கனிந்து இளகிய உள்ளத்தர் ஆதல் கடவுளிடத்தில் பத்தி செய்தல் போன்றனவே முத்திக்கு வழி என இவர் கூறுவர். எல்லா ஞானங்களும் பத்தியில் அடக்கம்.

"என்பே விறகா இறைச்சி யறுத்திட்டுப்
பொன்போற் கனலிற் பொரிய வறுப்பினும்
அன்போ டுருகி அகங்குழை வார்க்கன்றி
என்பொன் மணியினை எய்தவொண் ணாதே"
"அன்புஞ் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்
அன்பே சிவமாவ தாரு மறிகிலார்
அன்பே சிவமாவ தாரு மறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்திருந் தாரே"
"ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள்
ஈசனோ டாயினும் ஆசை யறுமின்கள்
ஆசை படப்பட ஆய்வருந் துன்பம்
ஆசை விடவிட ஆனந்த மாமே" (திருமந்திரம்)
"பற்றுக பற்றற்றான் பற்றினை யப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு" (குறள்)

திருமந்திரம் கி. பி. ஐந்தாம் நூற்றாண்டிற் செய்யப்பட்டதெனக் கருதப்படுகின்றது. சித்தர் நூல்களிலும் திருமந்திரத்திற் கூறப்படும் உண்மைகள் காணப்படுகின்றன.

திருமுறைகள்

  தமிழ்மக்களின் சமயக் கருத்துக்கள் திருமுறை களிலும் ஆழ்வார் பாடல்களிலும் ததும்பிக் கிடக்கின்றன. தோத்திரங்களுடன் அவை மிடைந்து