கிடத்தலின் அவை சாத்திரமாகப் பயன்படா. ஆயினும் சாத்திரங்களுக்கு மேற்கோள் அத் தோத்திரங்களே. சித்தாந்த நூல்கள் பண்டுதொட்டுத் தமிழ்மக்களிடையே மறை எனப் பெயர் பெற்றுவந்த சமய தத்துவக்கொள்கைகள் எல்லாவற்றையும் தொகுத்து முறைப்படுத்திச் செய்யப்பட்டனவே சைவசித்தாந்தநூல்கள் பதினான்கும்.1 "ஓரும் வேதாந்தமென் றுச்சியிற் பழுத்த சாரங் கொண்ட சைவசித்தாந்தத் தேனமுது" (குமரகுருபரர்) வேதாந்தம் - உபநிடதம். வீடு தமிழ்மக்கள் வீடு எனக்கொண்டது மெய்யுணர்வினாற் பற்றற்றுத் திருவருட் பண்புறுதலேயாகும். "பரனைநினைந் திம்மூன்றும் விட்டது பேரின்பவீடு" (ஒளவையார்). தொல்காப்பியத்திலும் வீடுபெறநிற்றல் துறவு எனக் கூறப்பட்டது. திருக்குறளில் நீத்தார்பெருமையும் இதனையே குறிக்கின்றது. சைவசமயத்தின் முடிவு, "அவனருளாலே அவன்றாள் வணங்கி" அவனை அடைதல். 1. The Saiva Siddhanta system is the most elaborate, influential and most intrinsically valuable of all religions of India. It is peculiarly The South Indian and Tamil religion and must be studied by every one who hopes to understand the influence of the great South Indian people. Saivaism is the old prehistorical religion of South India, essentially existing from pre-Aryan times, and holds sway over the hearts of Tamil people. But this great attempt to solve the problems of god, and soul, humanity nature, evil suffering, and the unseen world, has never been exponnded in English. Its text books exists in Tamil only. - Translation of Thiruvasagam - Dr. Pope. |